Swiss Local NewsZurich
சூரிச்சில் பொலிஸாரின் சோதனை நடவடிக்கை : சிக்கிய 125 சாரதிகள்
சூரிச்சில் பொலிஸாரின் சோதனை நடவடிக்கை : சிக்கிய 125 சாரதிகள் சூரிச் கன்டோனில் போலீசார் மேற்கொண்ட சோதனை நடவடிக்கைகளின் போது 125 சாரதிகளுக்கு எதிராக அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
சனிக்கிழமை இரவு வேளையில் இந்த சோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
சுமார் ஆறு மணித்தியாலங்கள் இந்த சோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
அதிக எண்ணிக்கையிலான சாரதிகள் வேகமாக வாகனத்தை செலுத்திய குற்றச்சாட்டில் தண்டிக்கப்பட்டுள்ளனர்.
ஓட்டுனர் உரிமம் தடை செய்யப்பட்ட ஒருவரும் வாகனம் செலுத்திய போது கண்டுபிடிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
வேகத்தின் அளவிற்க்கு ஏற்ற வகையில் அபராத தொகை நிர்ணயிக்கப்பட்டது.