சுவிஸில் பாலஸ்தீன மக்களுக்கு ஆதரவு தெரிவித்து பேரணி
சுவிஸில் வேர்ன் நகரில் பாலஸ்தீன மக்களுக்கு ஆதரவினை வெளியிட்டு பாரிய பேரணி ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
பேர்னில் அமைந்துள்ள நாடாளுமன்ற சதுக்கத்தில் இந்த பேரணி முன்னெடுக்கப்பட்டுள்ளது. ஆயிரக்கணக்கான மக்கள் இந்த பேரணி மற்றும் போராட்டத்தில் பங்கேற்று இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
சீரற்ற காலநிலையிலும் இந்த பேரணி முன்னெடுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. பேரணியில் சுமார் 10,000 பேர் பங்கேற்று இருந்தனர் என ஏற்பாட்டாளர்கள் தெரிவிக்கின்றனர். எனினும் இந்த எண்ணிக்கை விபரங்கள் உறுதிப்படுத்தப்பட்டவை அல்ல என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
காசா நிலப்பரப்பின் மீது கட்டவிழ்த்து விடப்படும் வன்முறைகளையும் உடன் நிறுத்த வேண்டும் என போராட்டக்காரர்கள் இஸ்ரேலை வலியுறுத்தியுள்ளனர். அனைத்து தரப்புகளிலும் பொதுமக்கள் உயிரிழப்பது ஏற்றுக்கொள்ளக்கூடியது அல்ல எனவும் வன்முறைகளை அனுமதிக்க முடியாது எனவும் சுட்டிக்காட்டியுள்ளனர்.
ஐரோப்பிய நாடுகளும் அமெரிக்காவும் இஸ்ரேலுக்கு ஆதரவளித்து வருவதனால் பாலஸ்தீன மக்கள் பெரும் பாதிப்புகளை எதிர் நோக்க நேரிட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. (Swissinfo)