சுவிஸ் அரசாங்கம் வான் பாதுகாப்பை பலப்படுத்த தீர்மானம்
சுவிட்சர்லாந்து அரசாங்கம் வான் பாதுகாப்பு கட்டமைப்பை பலப்படுத்துவதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளது.
இதன் ஒரு சட்டமாக நீண்ட தூர ஏவுகணைகளை அமெரிக்காவிடம் இருந்து கொள்வனவு செய்ய உள்ளது.
இது தொடர்பிலான உடன்படிக்கை ஒன்று அண்மையில் கைச்சாத்திடப்பட்டுள்ளது.
சுமார் 300 மில்லியன் ஸ்விஸ் பிராங்குகள் பெறுமதியான ஏவுகணைகள் கொள்வனவு செய்யப்பட உள்ளன.
சுவிட்சர்லாந்து ராணுவத்தின் ஆயுத கொள்வனவு பிரிவு இது தொடர்பான தகவல்களை வெளியிட்டுள்ளது.
ராணுவ வான் பாதுகாப்பு கட்டமைப்பு தொடர்பிலான உடன்படிக்கைக்கு சுவிட்சர்லாந்து நாடாளுமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
இதன்படி PAC-3 MSE எனப்படும் ஏவுகணைகள் கொள்வனவு செய்யப்பட உள்ளன.
இந்த அதிநவீன ஏவுகணைகள் 20 2028 மற்றும் 2029 ஆம் ஆண்டுகளில் அனுப்பி வைக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகிறதுஃ
உலகின் ஏனைய நாடுகளைப் போன்று சுவிட்சர்லாந்தும் ராணுவ ரீதியான பலத்தை அதிகரித்து கொள்வதற்கான நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது. (source:- Tamiinfo)