ஜெனிவாவில் நீதிகோரிய புலம்பெயர் தமிழர்கள் (படங்கள் இணைப்பு)
ஜெனிவாவில் நீதிகோரிய புலம்பெயர் தமிழர்கள் (படங்கள் இணைப்பு) சிறிலங்காவில் ஈழத்தமிழினத்தின் மீது மேற்கொள்ளப்பட்ட படுகொலைகள் உட்பட்ட பெரும் மனித உரிமை மீறல்களுக்கு நீதிகோரி ஐ.நா மனித உரிமைப் பேரவை முன்றலில் புலம்பெயர் தமிழர்களால் இன்று பிற்பகலில் ஒன்றுகூடல் நடத்தப்பட்டுள்ளது.
இந்த ஒன்று கூடல் நடத்தப்பட முன்னர் இன்று பகல் ஒரு செய்தியாளர் மாநாடும் நடத்தப்பட்டிருந்தது.
கடுமையான மழைப்பொழிவு
கடுமையான மழைப்பொழிவுக்கு மத்தியில் மக்கள் இதில் பங்கெடுத்திருந்தனர்.
இந்த நீதிகோரிய ஒன்றுகூடலில் கடந்த மாத இறுதியில் பிரித்தானியாவிலிருந்து ஜெனிவா நோக்கி ஆரம்பிக்கப்பட்ட மிதிவண்டிப் பயணத்தில் பங்கெடுத்த செயற்பாட்டாளர்களும் இணைந்திருந்தனர்.
திலீபனின் நினைவூர்தி மீதான தாக்குதல்
நேற்று திருமலையில் தியாகி திலீபனின் நினைவூர்தி மீதான தாக்குதலுக்குரிய எதிர்ப்பும் இன்றைய போராட்டத்தின் போது வெளிப்பட்டதையும் காணமுடிந்தது.