Glarus / Niederurnen இல் ஏற்பட்ட விபத்தில் ஒருவர் படுகாயம்.!
Glarus மாகாணத்தில் Niederurnen இல் ஏற்பட்ட விபத்தில் ஓட்டுனர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் திங்கட்கிழமை, மார்ச் 6, 2023 அன்று, காலை 10.30 மணியளவில், Niederurnen னில் A3 நெடுஞ்சாலையில் ஏற்பட்டது.
சூரிச் நோக்கிய AutoBhan பாதையில் பயணிகள் கார் ஒன்றின் ஓட்டுநர் பயணம் செய்து கொண்டிருந்தார். பிரேக் போட்டபோது, 28 வயதுடைய பெண் தனது வாகனத்தின் கட்டுப்பாட்டை இழந்தார். இதனால் விபத்து தடுப்பு கம்பியில் பலமுறை மோதி விபத்துக்கு உள்ளானது.
இந்த விபத்தில் ஓட்டுநருக்கு காயம் ஏற்பட்டது. பரிசோதிக்க ஆம்புலன்ஸ் மூலம் கிளாரஸில் (Glarus) உள்ள கன்டோனல் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். இதில் கார் முற்றிலும் சேதமடைந்ததுடன், சாலை உபகரணங்களும் சேதமடைந்தன.
மீட்பு மற்றும் துப்புரவு பணியின் போது, சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. விபத்து நடந்த இடத்தில் ஒரு வழிப்பாதையில் போக்குவரத்து திருப்பி விடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
மேலும் சுவிற்சர்லாந்தின் உள்ளுர் செய்திகள் முதல் அத்தனை விடயங்களையும் அறிந்து கொள்ள SwissTamil24.Com எமது இணையத்தளத்தினை தினமும் பார்வையிடுங்கள்.