முக்கிய செய்திகள்

வன்முறையை தடுக்கும் முழுப்பணியில் ஈடுபட்டுள்ள சென்ட் காலன் காவல் துறையினர்.!!

வன்முறையை தடுக்கும் முழுப்பணியில் ஈடுபட்டுள்ள சென்ட் காலன் காவல் துறையினர்.!!

சென்ட் கேலன் நகர காவல்துறை அடுத்த வெள்ளிக்கிழமை மீண்டும் விரிவான அடையாள சோதனைகளை மேற்கொள்ள விரும்புவதாக அறிவித்துள்ளது. ஈஸ்டர் வார இறுதியில், தொடர்ச்சியாக ஏற்பட்ட வன்முறைகள் மற்றும் கலவரங்கள் காரணமாகவே இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

தொடர்ச்சியாக இரண்டு வெள்ளிக்கிழமைகளில் புனித வெள்ளி அன்று, செயிண்ட் காலன் மாநிலத்தில் கலவரம் ஏற்பட்டது. ஈஸ்டர் ஞாயிற்றுக்கிழமை, மீண்டும் வன்முறைய ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் தென்பட்டதை தொடர்ந்து, நகர காவல்துறையினர் மக்களைச் சரிபார்த்து, நகரத்திலிருந்து சுமார் 650 பேரை வெளியேற்றினர்.

வன்முறையை
வன்முறையை

இதன் மூலம் வன்முறையைத் தடுக்கும் முயற்சி எட்டப்பட்டதாக காவல்துறை வியாழக்கிழமை அறிவித்திருந்தார்கள்.இந்த வெள்ளிக்கிழமை செயின்ட் கேலன் நகரில் மீண்டும் வன்முறைக்கான சாத்தியக்கூறுகள் தென்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

இதற்கு முன்பு ஏற்பட்ட வன்முறை மற்றும் சேதம் இன்னும் சரி செய்யப்படவில்லை. இது இப்படி இருக்க ஒருபுறம், ஏற்கனவே 30 நாட்களுக்கு வெளியேற்றப்பட்டவர்களுக்கு ஏதாவது தேவைகள் இருக்கிறதா என்பது தொடர்பிலும் போலீசார் விசாரித்து வருகிறார்கள்.

மறுபுறம், நகர காவல்துறையினர் “கலவரத்தைத் உண்டுபண்ணும்” அல்லது கலவரத்தில் கலந்துகொள்ளும் மக்களை வெளியேற்றே முனைப்புடன் செயப்பட விருக்கிறது.

Related posts