Black Friday – சுவிட்சர்லாந்தில் இணைய வழி மோசடி குறித்து எச்சரிக்கை, சுவிட்சர்லாந்தில் இணைய வழியில் மோசடிகள் இடம்பெறக்கூடிய சாத்தியங்கள் காணப்படுவதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் வெள்ளிக்கிழமை அதாவது பிளக் ப்ரைடே தினத்தில் அநேகமான சில்லறை வியாபார நிறுவனங்கள் பாரியளவிலான விலைக் கழிவுகளை அறிவிப்பது வழமையானதாகும்.
பெரும் எண்ணிக்கையிலான பொருட்களுக்கு இவ்வாறு விலைக்கழிவு அறிவிக்கப்படும்.
எனினும்,சில மோசடிகாரர்கள் இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி மோசடிகளில் ஈடுபடக்கூடிய சாத்தியங்கள் உண்டு என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
நியாயமான விலையில் நியாயமான நிபந்தனைகளுடன் விலைக் கழிவு அறிவிக்கப்படாது நம்ப முடியாத வகையில் விலைக்கழிவு குறித்து விளம்பரம் செய்யப்பட்டால் வாடிக்கையாளர்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டுமென தெரிவித்துள்ளது.
இணைய வழியில் மோசடிகள் இடம்பெறுவதனை தடுத்து நிறுத்த வாடிக்கையாளர்கள் விழிப்புடன் இருக்க வேண்டியது அவசியமானது என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.