முக்கிய செய்திகள்

சூரிச் நகரில் புகுந்த ஆயுதம் தாங்கிய போலீசார் : அலறித்துடித்த மக்கள்

swiss-police-in-zurich

சூரிச் நகரில் புகுந்த ஆயுதம் தாங்கிய போலீசார் : அலறித்துடித்த மக்கள் – சுவிட்சர்லாந்தில், திடீரென ஆயுதம் தாங்கிய பொலிசார் ரயிலில் திபுதிபுவென நுழைய, பயணிகள் சிலர் பயந்து அலறிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

சூரிச்சில், சனிக்கிழமை மாலை 7 மணியளவில், திடீரென ஆயுதம் தாங்கிய பொலிசார் ரயில் பெட்டிகளுக்குள் நுழைந்ததைக் கண்டு, பயணிகள் அதிர்ச்சியடைந்தனர்.

சுமார் பத்து நிமிடங்கள் பொலிசார் ரயிலில் சோதனை மேற்கொள்ள, சில பயணிகள் கைகளைத் தூக்கியபடி பயந்து அலறியதாக, சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் ஊடகவியலாளர்களிடம் தெரிவித்தனர்.

சூரிச் செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள இங்கே கிளிக் செய்யுங்கள்

பொலிசார் இறங்கியதும், அந்த ரயிலிலிருந்த அனைவரும் இறக்கிவிடப்பட்டு வேறு ஒரு ரயிலில் ஏற்றி அனுப்பப்பட்டனர்.

சூரிச் நகரில்

சந்தேகத்துக்குரிய நபர் ஒருவர் ரயிலில் பயணிப்பதாக துப்புக் கிடைத்ததைத் தொடர்ந்து சோதனை மேற்கொண்டதாக சூரிச் பொலிசார் தெரிவித்தனர்.

ஆனால், யாராவது கைது செய்யப்பட்டார்களா என்பதை அவர்கள் தெரிவிக்கவில்லை.

Related posts