
துர்காவ் மாகாணத்தில் உள்ள புஸ்னாங்கில் (Bussnang) பாதசாரி சுரங்கப்பாதையில் இறந்த நபர் ஒவவர் போலீசாரினால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் தொடர்பின் மேலும் தெரியவருவதாவது:-
செவ்வாய்க்கிழமை காலை புஸ்னாங் (Bussnang) ல் பாதசாரி சுரங்கப்பாதையில் இறந்தவர் கண்டுபிடிக்கப்பட்டார். துர்காவ் கன்டோனல் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று இறந்தவர் தொடர்பாக விசாரணை செய்து அறிக்கை வெளியிட்டுள்ளார்கள்.
இதன்படி இறந்தவர் 56 வயதுடையவர் எனவும். அதிகாலை 4 மணியளவில் இறந்தவர் கண்டுபிடிக்கப்பட்டதாகவும், போலீசார் அந்த இடத்தில் கூடாரம் அமைத்து விசாரணைகளை மேற்கொண்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
துர்காவ் கன்டோனல் போலீசார், இந்த சம்பவம் தொடர்பில் ஊடகத்திற்கு உறுதிசெய்து தற்போதைய அறிவின் படி, மூன்றாம் தரப்பினரின் குறுக்கீடு எதுவும் இல்லை எனவும் இது கொலை சம்பவமாக கருதமுடியாது எனவும் குறிப்பிட்டனர்.