
கோவிட் பெருந்தொற்று நிலைமைகளுக்கு மத்தியிலும் சுவிட்சர்லாந்து பொருளாதார சவால்களை வெற்றிகரமான முறையில் எதிர்நோக்கியுள்ளது என தெரிவிக்கப்படுகின்றது.
நாட்டில் பொருளாதாரம் பின்னடையும் என எதிர்வு கூறப்பட்ட போதிலும், இந்த சவால்கள் வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டுள்ளதாக சூரிச் பொலிதெனிக் நிறுவகத்தின் பொருளியலாளர் Jan-Egbert Sturm தெரிவித்துள்ளார்.
பல நிபுணர்களின் எதிர்வுகூறல்களை விடவும் பொருளாதார சவால்கள் வெற்றிகொள்ளப்பட்டதாகத் தெரிவித்துள்ளார்.
பொருளாதாரத்தில் சிறு சிறு பின்னடைவுகள் ஏற்பட்டாலும் பாரியளவு வீழ்ச்சி பதிவாகவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
பெருந்தொற்று நிலைமைகளிலும் மருந்துப்பொருள் கைத்தொழில் சவால்களை வெற்றிகொண்டுள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
எவ்வாறெனினும் ஹோட்டல் துறை, ரெஸ்டுரன்ட் துறை போன்றவற்றில் பின்னடைவு ஏற்பட்டுள்ளதனை தாம் ஒப்புக்கொள்வதாகத் தெரிவித்துள்ளார்.
எவ்வாறெனினும் ஒட்டுமொத்தமாக நாடு பாரியளவு பின்னடைவினை சந்திக்கவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்