முக்கிய செய்திகள்

500 கிலோ சீஸ் … சமூக ஊடகங்களில் விடுக்கப்பட்டுள்ள அழைப்பு

swiss chees

சுவிட்சர்லாந்தில் சீஸ் தயாரிப்பாளர் ஒருவர் 500 கிலோ சீஸ் தயாரித்து வியாபாரி ஒருவருக்கு அனுப்பி வைத்தார். ஆனால், அந்த சீஸ் சரியாக பார்சல் செய்யப்படவில்லை என்று கூறி அதை திருப்பி அனுப்பிவிட்டார் அந்த வியாபாரி.

500 கிலோ சீஸை என்ன செய்வது?

குப்பைக்குத்தான் அது போகப்போகிறது என முடிவு செய்த அந்த சீஸ் தயாரிப்பாளர், உணவை வீணாக்குவதற்கு எதிராக போராடும் Frischer Fritz என்ற ஒரு அமைப்பிடம் அந்த 500 கிலோ சீஸையும் ஒப்படைத்தார்.

500 கிலோ சீஸ்
500 கிலோ சீஸ்

தற்போது அந்த அமைப்பு, அந்த சீஸ் வீணாகாமல் தவிர்ப்பதற்காக, அதை வாங்கிக்கொள்ளுமாறு சமூக ஊடகங்களில் மக்களுக்கு அழைப்பு விடுத்துள்ளது.

 

Source:- TamilWin

Related posts