
தப்பியோடிய மாடு ரயில் மீது மோதியது – பேர்ன் நகரில் சம்பவம்.!! இறைச்சிக்காக வெட்டப்படவிருந்த மாடு ஒன்று அங்கிருந்து தப்பியோடிச் சென்ற போது ரயிலில் மோதுண்டு உயிரிழந்துள்ளது.
சுவிட்சர்லாந்தின் எமென்டலின் Rüdtlingen பகுதியில் இந்த சம்பவம் பதிவாகியுள்ளது.
வெட்டப்படவிருந்த நிலையில் அந்த இடத்தை விட்டு தப்பியோடிச் சென்ற போது ரயிலில் மோதுண்டு சம்பவ இடத்திலேயே மாடு உயிரிழந்துள்ளது. இந்த விபத்து இடம்பெற்ற போது ரயிலில் 30 பேர் இருந்தனர் எனவும், எவருக்கும் காயங்கள் ஏற்படவில்லை எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
விபத்து காரணமாக ரயிலில் பயணம் செய்தவர்கள் பஸ் ஒன்றின் மூலம் அவர்களது பயண தூரத்தை சென்றடைந்தனர் என தெரிவிக்கப்படுகின்றது. ரயில் நிலையத்திற்கு அருகாமையில் இருந்த இறைச்சிக் கடையொன்றிலிருந்து மாடு தப்பிச் சென்றுள்ளது.
இந்தவ பத்து காரணமாக ரயில் பாதைக்கு சிறு சேதம் ஏற்பட்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இதற்கு முன்னரும் இவ்வாறு குறித்த இறைச்சிக் கடையிலிருந்து தப்பித்துச் சென்ற மாடுகள் ரயிலில் மோதுண்டு உயிரிழந்துள்ளதாக பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் தெரிவிக்கின்றனர்.