சுவிஸில் வெளிநாட்டவர்களைக் குறித்த மக்கள் கருத்துகள் மோசமடைந்துள்ளன
சுவிட்சர்லாந்தில் வெளிநாட்டவர்கள் பற்றிய பொதுமக்களின் பார்வை கடந்த சில ஆண்டுகளில் மோசமடைந்துள்ளது என்று சுவிஸ் மத்திய புள்ளிவிவர அலுவலகம் (FSO) அறிவித்துள்ளது.
2022 முதல் 2024 வரையிலான காலகட்டத்தில், வெளிநாட்டவர்களின் கல்வி முறை மீதான தாக்கம் எதிர்மறையாக இருக்கிறது என கருதும் மக்கள் எண்ணிக்கை 7 சதவீதம் அதிகரித்துள்ளது.
வெளிநாட்டவர்கள் சுவிஸில் சாலைகளை பாதுகாப்பற்றதாக மாற்றுகின்றனர் என நினைப்பவர்களின் விகிதம் 6 சதவீதம் அதிகரித்து 30% ஆகியுள்ளது.
மேலும், சமூக நலத்திட்டங்களை வெளிநாட்டவர்கள் தவறாக பயன்படுத்துவதைப் பற்றிய அச்சம் மக்களிடையே அதிகம் காணப்படுவதாகவும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இருப்பினும், 70% மக்கள் வெளிநாட்டவர்கள் சுவிஸில் வாழ்வதை ஆதரிக்கின்றனர் மற்றும் அவர்களது இருப்பு நாட்டிற்கு பல சாதகமான விளைவுகளை ஏற்படுத்துகிறது என கருதுகின்றனர்.
அவர்கள் சுவிஸில் சாலைகள் பாதுகாப்பற்றதாக உணர்வதற்கும், வேலைவாய்ப்பு குறைவதற்கும் காரணமில்லை என பெரும்பாலான மக்கள் நினைக்கின்றனர்.
சுவிஸில் வசிக்கும் வெளிநாட்டவர்களுக்கு கூடுதல் உரிமைகள் வழங்கப்பட வேண்டும் என 60% மக்கள் ஆதரிக்கின்றனர், குறிப்பாக குடும்பத்தினரை சேர்த்துக்கொள்ள (Family reunification) உரிமை வழங்க வேண்டும் என்ற கருத்தில் அவர்கள் உறுதியாக உள்ளனர்.
ஆனால், அரசியல் உரிமைகள் (தேர்தல் வாக்கு உரிமை, அரசியலில் பங்கேற்பு) வழங்கப்பட வேண்டுமா என்பது குறித்து மக்களின் ஆதரவு 2022 முதல் 2024 வரை ஐந்து சதவீதம் குறைந்துள்ளது.
இந்த அறிக்கையால், சுவிஸில் வெளிநாட்டவர்களைப் பற்றிய மக்கள் மனநிலை மாற்றம் பெற்றுள்ளது என தெரிவிக்கப்படுகின்றது.
(c) Tamilnews