ஜெனீவா விமான நிலையத்தில் கணினி கோளாறு: விமானப் பயணங்கள் தாமதம்
நேற்றைய தினம் ஜெனீவா விமான நிலையத்தில் கணினி கோளாறு காரணமாக விமானப் பயணங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நேற்றைய தினம தினம் பிற்பகலிலிருந்து இவ்வாறு விமானப் பயணங்களுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. எதனால் கணனிக் கட்டமைப்பில் கோளாறு ஏற்பட்டது என்பது குறித்த தகவல்கள் வெளியிடப்படவில்லை.

‘விமான சேவையில் முக்கியமான தாமதங்கள் சில ஏற்பட்டுள்ளன. குறித்த சூழ்நிலையை கருத்தில் கொண்டு ஏற்கனவே ஜெனீவா நோக்கி பயணித்துக் கொண்டிருக்கும் விமானங்களை மட்டுமே வரவழைக்க முடியும் என ஜெனீவா விமான நிலைய செய்தித் தொடர்பாளர் இக்னாச் ஜென்னராட் தெரிவித்திருந்தார்.
பயணிகள் தங்களது விமான நிறுவனங்களைத் தொடர்புகொண்டு மேலதிக தகவல்களை பெற்றுக்கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.