தீவிரவாத குற்றச்சாட்டு சுமத்தப்படும் சிறுவர்கள் குறித்து விசேட கவனம்
தீவிரவாத குற்றச்சாட்டுகள் சுமத்தப்படும் சிறுவர்களுக்கு எதிராக நடவடிக்கைகள் எடுப்பது தொடர்பில் சுவிட்சர்லாந்தின் சட்டமா அதிபர் திணைக்களம் ஆலோசனை கோரியுள்ளது.
பயங்கரவாத செயற்பாடுகளில் ஈடுபடும் சிறுவர்களை தண்டிப்பதற்கு போதிய அளவு சட்ட ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என சட்ட மா அதிபர் திணைக்களம் வலியுறுத்தியுள்ளது.
கடந்த 2023 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் முதல் ஐரோப்பிய நாடுகளில் பயங்கரவாத சம்பவங்களுடன் தொடர்பு என்ற அடிப்படையில் கைதானவர்களில் மூன்றில் இரண்டு பேர் 13 முதல் 19 வயது வரையிலானவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

சுவிட்சர்லாந்திலும் இவ்வாறான சிறுவர் தீவிரவாத சந்தேக நபர்கள் பதிவாகியிருந்தனர். கடந்த ஆண்டு 15 வயதான சுவிட்சர்லாந்து சிறுவன் ஒருவன் தீவிரவாத குற்றச்செயல்கள் தொடர்பில் குற்றம் சுமத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
ஒவ்வொரு கன்டோன்களிலும் இவ்வாறான சம்பவங்கள் தொடர்பிலான பொது தகவல்களை பரிமாறிக் கொள்வதற்கு ஓர் பொறிமுறை உருவாக்கப்பட வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
சுவிட்சர்லாந்தின் சட்டமா அதிபர் திணைக்களம் இது தொடர்பான யோசனையை முன்மொழிந்துள்ளது.