சுவிட்சர்லாந்தில் பொருளாதார வளர்ச்சியில் பின்னடைவு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கடந்த 2024 ஆம் ஆண்டுக்கான பொருளாதார வளர்ச்சி குறைவடைந்துள்ளது என தெரிவிக்கப்படுகிறது.
குறிப்பாக சேவை துறைகளில் பொருளாதார வளர்ச்சி எதிர்பார்த்த அளவு அதிகரிக்கவில்லை என தெரிவிக்கப்படுகிறது. 2024 ஆம் ஆண்டு சுவிட்சர்லாந்தின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 0.8 வீதத்தினால் அதிகரித்துள்ளது.

பொருளியல் நிபுணர்களினால் எதிர்வுகூறப்பட்ட அளவிற்கு பொருளாதார வளர்ச்சி அடையவில்லை என தெரிவிக்கப்படுகிறது. சுவிட்சர்லாந்து பொருளாதார விவகாரங்களுக்கான செயலகம் இந்த தகவல்களை வெளியிட்டுள்ளது.
எவ்வாறெனினும் சேவைத் துறையில் ஓரளவு வளர்ச்சி பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.