சுவிற்சர்லாந்தின் மாகாணசபைத் தேர்தலில் களமிறங்கும் தமிழர்கள்
சுவிற்சர்லாந்தின் சொலுத்தூர்ன் மாகாணசபைத்தேர்தலில் சோசலிச ஜனநாயககட்சி (SP) சார்பில் நான்கு தமிழர்கள் போட்டியிடவுள்ளனர்.
சொலுத்தூர்ன் மாநிலத்தில் வருகின்ற மார்ச் மாதம் மாகணசபைத்தேர்தல் நடைபெற உள்ளது. இதன்படி 4 உள்ளூர் ஆட்சி பிரதேசங்களிலேயே குறித்த தமிழர்களும் போட்டி இடுகின்றனர்.
இதற்கமைய சத்தியசீலன், சுந்தரலிங்கம், ராசமாணிக்கம், சுதா கானா ஆகியோரே இவ்வாறு போட்டியிடுகின்றனர். இந்நிலையில் அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில், “சுவிற்சர்லாந்து பிராஜா உரிமைபெற்ற அனைத்து தமிழர்களிற்கு வாக்களர் அட்டை வீடுகளிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தனர்.

இவர்களிற்கும் முறையே இரண்டு வாக்குகளை அளித்து வெற்றி வாய்ப்பினை ஏற்படுத்தி கொடுக்க ஒவ்வொரு உள்ளூராச்சி பிரிவில் சராசரி 500 தமிழ் வாக்குகள் இருப்பின் இரண்டு வாக்குகள் வழங்குவதால் 1000 ஆக இரட்டிப்பாகும் என்பது குறிப்பிடத்தக்கது.
எனவே 50000 அதிகமான தமிழர்கள் வாழும் இந்நாட்டில் இந்த சிறுபாண்மையினரின் பிரதிநிதித்துவம் அத்தியாவசியமானது, ஒவ்வோரு வாக்களரும் தமது தொழில்துறை நண்பர்கள் நண்பர்களிடமும் வாக்களிக்க ஊக்குவிப்பதனால் ஒரு தமிழ்பிரதநிதித்துவத்தினை பெற்று கொள்ள முடியும்.
வாக்களிப்பதில் சந்தேகம் இருப்பின் தயவு செய்து சிரமம் பாராது வேட்பாளர்களுடன் தொடர்பு கொள்ளுங்கள். உங்கள் சமூக வளைத்தளங்களில் வேட்பாளர்களை பற்றிய தகவல்களை பகிரச்செய்யுங்கள். உங்கள் வாக்கு வலிமையானது உங்கள் ஆதரவு முக்கியமானது எனவும் கேட்டக்கொள்ளப்பட்டுள்ளது.
(c) TamilWin