சுவிஸ் மலைப்பகுதிகளில் அதிக அளவு நட்சத்திர ஹோட்டல்கள் உருவாக்கப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது. நான்கு மற்றும் ஐந்து நட்சத்திர ஹோட்டல்கள் அதிக அளவில் உருவாக்கப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.
ஹொட்டலியர் சூசி என்ற தன்னார்வ நிறுவனம் இது தொடர்பான தகவல்களை வெளியிட்டுள்ளது. கடந்த 2010 ஆம் ஆண்டில் சுவிஸ் ஆல்ப்ஸ் மலைத்தொடர்களில் 253 ஹோட்டல்கள் காணப்பட்டதாகவும் 2023 ஆம் ஆண்டு அளவில் இந்த எண்ணிக்கை 304 ஆக உயர்வடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

மூன்று நட்சத்திர ஹோட்டல்களின் எண்ணிக்கை கணிசமான அளவு குறைவடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அதி சொகுசு ஆடம்பர ஹோட்டல்கள் அதிகளவில் நிர்மாணிக்கப்படுவதாகவும் இதனால் சாதாரண ஹோட்டல்களின் எண்ணிக்கை குறைவடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
செல்வந்த சுற்றுலா பயணிகள் அதி சொகுசு ஹோட்டல்களில் தங்குவதற்கு நாட்டம் காட்டுவதாக தெரிவிக்கப்படுகிறது. இதனால் இவ்வாறான ஆடம்பர ஹோட்டல்கள் நிர்மானிக்கப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.
(c) Tamilnews