84 வயதான ஓட்டுனர் விபத்து : நீரோடைக்குள் தலைகீழாக கவிழ்ந்த கார் :
பிப்ரவரி 14, 2025 வெள்ளிக்கிழமை மதியம் ஆர்காவ் கன்டோனிலுள்ள (Oftringen) ஆஃப்ட்ரிங்கனில் ஒரு வயதான பெண் தனது காரின் கட்டுப்பாட்டை இழந்தார். அவரது கார் அருகிலுள்ள ஓடையில் விழுந்து விபத்துக்குள்ளானது. எனினும் அதிர்ஷ்டவசமாக, அவருக்கு பெரிய காயம் ஏற்படவில்லை.
பெர்ரி-சென்டர் ரவுண்டானா அருகே பெர்ன்ஸ்ட்ராஸில் மாலை 4:00 மணியளவில் இந்த சம்பவம் நடந்தது. ரோத்ரிஸ்ட்டில் இருந்து காரை ஓட்டிச் சென்றபோது, அந்தப் பெண் தனது காரின் கட்டுப்பாட்டை இழந்தார். முதலில், வாகனம் ஒரு பொதுப் பேருந்தில் மோதியது, பின்னர் ரவுண்டானாவின் புல்வெளிப் பகுதி மீது சென்றது. பின்னர் அது எதிர் பாதையில் கடந்து, சாலையை விட்டு வெளியேறி, மரங்கள் மற்றும் புதர்களால் மூடப்பட்ட ஒரு சரிவில் உருண்டு, பின்னர் ஓடையில் தலைகீழாக இறங்கியது.

பேருந்தில் இருந்த பயணிகள் விரைவாக ஓடி வந்து உதவி செய்தனர். இடுப்பு ஆழமான நீரில் கார் கவிழ்ந்திருப்பதைக் கண்டனர். ஒரு துணிச்சலான உதவியாளர் அந்தப் பெண்ணை வெளியே இழுத்தார், பேருந்தில் இருந்த ஒரு மருத்துவர் அவரது நிலையை பரிசோதித்தார். பின்னர் ஆம்புலன்ஸ் 83 வயதான அந்த மூதாட்டியை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றது.
கார் முற்றிலும் சேதமடைந்துள்ளது. ஓடையில் இருந்து அதை அகற்ற தீயணைப்பு வீரர்கள் மற்றும் ஒரு கிரேன் தேவைப்பட்டது. விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். அவர்கள் தற்காலிகமாக அந்தப் பெண்ணின் ஓட்டுநர் உரிமத்தை பறித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Kantonspolizei Aargau (c)