லெப். கேணல் கௌசல்யன் உட்பட நான்கு மாவீரர்கள் – வணக்க நிகழ்வு!
சுவிசில் உணர்வெழுச்சியுடன் நடைபெற்ற லெப். கேணல் கௌசல்யன் உட்பட நான்கு மாவீரர்கள், மாமனிதர் சந்திரநேரு அவர்களினதும் நினைவுகள் சுமந்த வணக்க நிகழ்வு!
07.02.2005 அன்று வெலிகந்தைப் பகுதியில் சிறிலங்காவின் துணை இராணுவக் குழுக்களின் தாக்குதலில் வீரச்சாவடைந்த மட்டு. அம்பாறை அரசியல்துறைப் பொறுப்பாளர் லெப். கேணல் கௌசல்யன், மேஜர் புகழன், மேஜர் செந்தமிழன், 2ம் லெப். விதிமாறன், மாமனிதர் சந்திரநேரு அரியநாயகம் ஆகியோரின் இருபதாம் ஆண்டு நினைவெழுச்சி நாளானது 07.02.2025 வெள்ளி அன்று சுவிஸ் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் அலுவலகத்தில் அமைந்துள்ள லெப். கேணல் கௌசல்யன் கலைக்கூடத்தில் நினைவுகூரப்பட்டது.

சுவிஸ் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் ஏற்பாட்டில் நடைபெற்ற இவ்வணக்க நிகழ்வில் பொதுச்சுடரேற்றலுடன் மலர்மாலை அணிவித்தலைத் தொடர்ந்து ஈகைச்சுடர்கள் ஏற்றப்பட்டு அகவணக்கத்துடன் சுடர், மலர்;வணக்கம் செலுத்தப்பட்டது.
மாவீர வித்துகளின் நினைவுகள் சுமந்து நினைவுரை, மாவீரர் நினைவுப்பகிர்வும் இடம்பெற்றன. நிகழ்வின் இறுதியாக நம்புங்கள் தமிழீழம் பாடலைத் தொடர்ந்து தாரக மந்திரத்துடன் நிகழ்வுகள் நிறைவுபெற்றன.