சுக் கன்டோனில் முற்றிலும் மின்சாரத்திற்கு மாறியது குப்பை அகற்றும் வாகனம்!
சுவிசிலில் உள்ள சுக் கன்டோனில் இந்த ஆண்டு முதல் வீட்டுக் கழிவுகளை அகற்றுவதற்கு இதுவரை டீசல் இயந்திரத்தில் இயங்கும் கழிவு எடுக்கும் பாரவூர்திகள் பயன்படுத்தப்பட்டு வந்துள்ளன.
தற்போது டீசலை முற்றுலிலும் தவிர்த்து மின்சாரத்தில் இயங்கும் கழிவு எடுக்கும் பாரவூர்திகள் பயன்பாட்டுக்கு வந்துள்ளன. இந்த பாரவூர்திகளுக்கு மின்சாரம் ஏற்றுவதற்கு, சூரிய சக்தி மற்றும் நீர்மின்சாரம் மூலம் மின்சாரங்கள் வழங்கப்படுகின்றன.

டீசல் இயந்திரத்தில் இயங்கும் கழிவு அகற்றும் பாரவூர்திகளில் இருந்து வெளிவரும் சத்தம் மற்றும் கரிய அமில வாயு நகரை மாசு படுத்துகிறது. டீசல் இயந்திர கழிவு அகற்றும் பாரவூர்த்தியை வாங்கும் விலையை விட மின்சார கழிவு அகற்றும் பாரவூர்தியின் விலை இரண்டு மடங்காகும்.
கழிவகற்றும் பாரவூர்திகளுக்கு மின்சாரம் ஏற்றுவதற்காக சுக் நகரின் மாநகராட்சியில் உள்ள தொழில்துறையில் ஒரே நேரத்தி்ல் 32 வாகனங்களுக்கு மின்சாரம் ஏற்றும் வகையில் ஒரு பொிய சூரிய சக்தி பூங்கா அமைக்கப்பட்டுள்ளது. இங்கிருந்தே மின்சாரம் வழங்கப்படுகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.