ட்ரம்பின் வரி விதிப்பினால் சுவிஸில் பாதிக்கப்படும் உற்பத்தித்துறை
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் வரி விதிப்பு காரணமாக சுவிட்சர்லாந்தின் உற்பத்தித்துறை பாதிக்கப்படும் என தெரிவிக்கப்படுகின்றது. கனடா, மெக்ஸிக்கோ மற்றும் சீனா ஆகிய நாடுகளின் ஏற்றுமதிகள் மீது அமெரிக்க அரசாங்கம் வரி விதித்துள்ளது.
எனினும் இந்த வரி விதிப்புக்களானது நாட்டின் உற்பத்தித்துறையை பாதிக்கும் என சுவிஸ் அமைப்புக்கள் சுட்டிக்காட்டியுள்ளன. இந்த வரி விதிப்பானது உலகப் பொருளாதாரத்தில் தாக்கம் செலுத்தும் என சுவிஸ் உற்பத்தியாளர்கள் அமைப்பின் தலைவர் ஸ்டப்பான் புருபாச்சர் தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவில் பொருட்களின் விலைகள் உயர்வடையும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். சீனா மற்றும் மெக்ஸிக்கோவில் இயங்கி வரும் சுவிஸ் துணை நிறுவனங்கள் கூடுதல் பாதிப்புக்களை எதிர்நோக்க நேரிடும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
வரி விதிப்பினால் உற்பத்தி செலவு அதிகரிக்கப்பட்டாலும் அதனை நுகர்வோர் மீது சுமத்த முடியாது எனவும் அவ்வாறு சுமத்தினால் பாதிப்புக்கள் ஏற்படும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
(c) Tamilnews