சுவிட்சர்லாந்தில் கஞ்சா பயன்பாடு தொடர்பில் மீண்டும் வாக்கெடுப்பு
சுவிட்சர்லாந்தில் கஞ்சா பயன்படுத்துவதனை சட்ட ரீதியானதாக அங்கீகரிப்பதற்கு பொதுவாக்கெடுப்பு நடத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. சுவிட்சர்லாந்து அரசாங்கம் கஞ்சா பயன்பாட்டுக்கு எதிரான தடையை நீக்குவது குறித்து கவனம் செலுத்தி வருகின்றது.
அரசியல் ரீதியாக இந்த தடையை நீக்குவதற்கு திட்டமிடப்பட்டாலும் இந்த தடை நீக்கத்திற்கு மக்களின் ஆதரவு அவசியமானது என்பது குறிப்பிடத்தக்கது. எனவே கஞ்சா போதை பொருள் பயன்படுத்துவதனை சட்டரீதியானதாக ஆக்க வேண்டுமானால் அதற்கு பொது வாக்கெடுப்பில் மக்கள் ஆதரவினை வழங்க வேண்டும்.

சுவிட்சர்லாந்தில் சுமார் 4 வீதமானவர்கள் கஞ்சா போதை பொருளை பயன்படுத்துகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. கஞ்சா போதை பொருள் பயன்படுத்துவதனை சட்டரீதியாக அறிவிக்கும் சட்ட மூலம் ஒன்று நாடாளுமன்றில் மீண்டும் கொண்டுவரப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
சுவிட்சர்லாந்தில் சட்டவிரோத போதை பொருளாக கஞ்சா காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.