டீப் சீக்கை (DeepSeek) உன்னிப்பாக அவதானிக்கும் சுவிஸ் அதிகாரிகள்
டீப் சீக் தொழில்நுட்பத்தை உன்னிப்பாக அவதானிப்பதாக சுவிட்சர்லாந்து தெரிவித்துள்ளது சீனாவின் புதிய தொழில்நுட்பமான டீப் சீக் அண்மைய நாட்களில் சர்வதேசரீதியில் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியது.
டீப் சீக் நிறுவனத்தின் பங்கு பெறுமதி எதிர்பாராத விதமாக பாரிய அளவில் அதிகரிப்பினை பதிவு செய்திருந்தது. எனினும் சில நாடுகளில் இந்த தொழில்நுட்பத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக இத்தாலியில் டீப் சீக் தொழில்நுட்பத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும் தரவு பாதுகாப்பு ஏதுக்களை கரத்தில் கொண்டு இவ்வாறு தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
சீன நிறுவனமொன்றினால் டீப் சீக் எனும் தொழில்நுட்பம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இது ஓர் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த டீப் சீக் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் அறிமுகம் அமெரிக்காவின் முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு பெரும் சவாலை ஏற்படுத்தியுள்ளது.
அன்மைய நாட்களில் அமெரிக்கவின் முக்கிய தொழில்நுட்ப நிறுவனங்களின் பங்கு பெறுமதி எதிர்பாராத விதமாக சரிவினை சந்தித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
இவ்வாறான ஒரு பின்னணியில் குறித்த தொழில்நுட்பத்தை உன்னிப்பாக அவதானித்து வருவதாக தெரிவித்துள்ளனர். டீப் சீக் செயலியை உலகளவில் பல மில்லியன் பேர் தரவிறக்கம் செய்துள்ளனர்.
சுவிட்சர்லாந்தில் இந்த செயலிகளை பயன்படுத்தும் பயனர்களே அந்த செயலிகள் குறித்த பொறுப்பினை ஏற்க வேண்டுமென தெரிவிக்கப்படுகிறது. பயனர்கள் சீனாவின் தரவு பாதுகாப்பு நிலமைகள் குறித்து அவதானத்துடன் இருக்க வேண்டும் என சுவிட்சர்லாந்து அரசாங்கம் அறிவித்துள்ளது.
(c) Tamilnews