கணேஷா தமிழர் கலை பண்பாட்டு மன்றத்தின் தைப்பொங்கல் விழா
சுவிட்சர்லாந்து கணேஷா தமிழர் கலை பண்பாட்டு மன்றம் நடாத்தும் 2025ம் ஆண்டிற்கான பொங்கல் விழா எதிர்வரும் 01.02.2025 அன்று சனிக்கிழமை காலை 9 மணிமுதல் நடைபெறவுள்ளது.
சூரிச் மாநிலத்தின் வெட்சிகோன் மாவட்டத்தில் குறித்த விழா இடம்பெறவுள்ளது. இவ்விழாவில் பல்வேறு கலை கலாசார நிகழ்வுகளும் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேலும் தங்கள் கலைத்திறமைகளை வெளிக்காட்ட விரும்புகின்ற கலைஞர்கள் அனைவரும் கலந்து சிறப்பிக்க முடியும் எனவும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
பாடல் நடனம் நாட்டியம் என கலைப்படைப்புகளை கொடுக்கவிரும்பும் கலைஞர்கள் சிறுவர்கள் யாராகா இருந்தாலும் கணேஷா தமிழர் கலை பண்பாட்டு மன்றத்தினருடன் தொடர்புகொண்டு தங்கள் படைப்புகளை அரங்கேற்ற முடியும என கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
மேலும் குறித்த பொங்கல் விழாவிற்கு அனைவரும் கலந்து தங்கள் ஆதரவை தந்துதவுவதோடு இடம்பெறும் நிகழ்வுகளிலும் கலந்து சிறப்பிக்க அனைவரையும் அன்போடு அழைக்கிறார்கள் கணேஷா தமிழர் கலை பண்பாட்டு மன்ற நிர்வாகத்தினர்.
