தமிழீழ தேசியத்தலைவரின் ஆரம்பகால தளபதிகளுக்கான வணக்க நிகழ்வு..!!
தமிழீழ விடுதலைப்புலிகளின் சுவிஸ் கிளை 26-01-2025 இன்று ஞாயிற்றுக்கிழமை முக்கிய மாவீரர்களுக்கான வணக்க நிகழ்வு ஒன்று பேர்ன்னில் இடம்பெற்றது. குறித்த நிகழ்வில் தமிழீழ விடுதலைப்போராட்டத்தின் ஆணிவேராகவும் தமிழீழ தேசியத்தலைவரின் ஆரம்பகால தளபதிகளாகவும் இருந்து தமிழீழ போராட்டத்திற்கு அடித்தளம் இட்ட வரலாற்று நாயகர்களுக்காக வணக்கம் செலுத்தப்பட்டது.

அடிக்கற்கள் எழுச்சி வணக்க நிகழ்வு என்ற தொனியில் இடம்பெற்ற இவ்நிகழ்வில் மாவீர்களாகி மண்ணுக்குள் விதையாகிப்போன முக்கிய ஆரம்பகால தளபதிகளான..
- முதலாவது மாவீரரான லெப்டினன்ட் சங்கர்
- தாக்குதல் தளபதி லெப்டினன்ட சீலன்
- வீரவேங்கை ஆனந்
- லெப்டினன்ட் செல்லக்கிளி அம்மான்
- கப்டன் லாலா ரஞ்சன்
- லெப்டினனட் ராஜா
- கப்டன் பண்டிதர்
- கப்டன் ரெஜி
- மேஜர் அல்பேட்
- கப்டன் லிங்கம்
- மன்னார் மாவட்ட தளபதி லெப்.கேணல் விக்ரர்
- மூதூர் பிராந்திய தளபதி மேஜர் கணேஷ்
- லெப்.கேணல் பொன்னம்மான்
- மட்டு அம்பாறை மாவட்ட தளபதி லெப்.கேணல் குமரப்பா
- திருமலை மாவட்ட தளபதி லெப்.கேணல் புலேந்திரன்
- திருமலை மாவட்ட தளபதி லெப்.கேணல் சந்தோசம்
- கேணல் கிட்டு
- லெப்.கேணல் அப்பையா…..
ஆகியோர்களுக்கு வீரவணக்க நிகழ்வு இடம்பெற்றது. குறித்த நிகழ்வில் தாயக உறவுகள் ஈழ ஆதரவாளர்கள் என பலரும் கலந்துகொண்டிருந்ததோடு சுவிட்சர்லாந்தில் 2ம் 3ம் தலைமுறை தமிழ் இளைஞர் யுவதிகளும் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
