சுவிஸ் தமிழர் இல்லம் மற்றும் சுவிஸ் தமிழ் பெண்கள் அமைப்பு இணைந்து நடாத்திய பொங்கல் விழா 2025 நிகழ்வு நேற்று 25ம் திகதி சனிக்கிழமை பேர்ன் நகரில் இடம்பெற்றுள்ளது.
தமிழர் பண்பாட்டிற்கு அமைய மதியம் 1 மணியளவில் பொங்கல் பொங்கி பின்னர் பல்வேறு கலை நிகழ்வுகள் இடம்பெற்றன.
சுவிஸ் தமிழர் இல்லம் நடாத்திய பொங்கல் விழா 2025
எழுச்சிப்பாடல் எழுச்சிநடனங்கள் திரையிசைக்கானம் கவியரங்கம் பட்டிமன்றம் கிராமியநடனம் பரதநாட்டியம் போன்ற கலை நிகழ்வுகள் மிகச்சிறப்பான முறையில் இடம்பெற்றிருந்தன.
மேலும் சிறப்புரைகளும் இடம்பெற்ற இந்நிகழ்வில் பெருந்திரளான இளைஞர்கள் யுவதிகள் என கலை ஆர்வலர்களும் கலந்துகொண்டிருந்தனர்.