சுவிஸ் விமான சேவையின் இஸ்ரேலுக்கான விமான பயணங்கள் மீள ஆரம்பம்.!! சுவிஸ் விமான சேவை இஸ்ரேலுக்கான விமான பயணங்களை மீள ஆரம்பிப்பதாக அறிவித்துள்ளது.
மத்திய கிழக்கு பிராந்திய வலயத்தில் இடம் பெற்ற பதற்ற நிலைமை காரணமாக சுவிஸ் சர்வதேச விமான சேவை நிறுவனம் விமான பயணங்களை ரத்து செய்திருந்தது.
கடந்த இஸ்ரேல் ஹமாஸ் போர் பதற்றம் காரணமாக இந்த விமான சேவை ரத்து செய்யப்பட்டிருந்தது. மத்திய கிழக்கு நாடுகளின் நிலைமைகளை அவதானித்து தற்பொழுது விமான பயணங்களை ஆரம்பிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதன்படி எதிர்வரும் பெப்ரவரி மாதம் 1ம் திகதி சுவிஸ் சர்வதேச விமான சேவை நிறுவனத்தின் விமானங்கள் தெல் அவீவ் நகரிற்கு பயணங்களை முன்னெடுக்க உள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
எவ்வாறெனினும், லெபனானுக்கான விமான பயணங்கள் தொடர்ந்தும் இரத்து செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.