சுவிஸ் தமிழர் ஒருங்கிணைப்பு குழு நடாத்திய புத்தாண்டும் புதுநிமிர்வும் 2025 தமிழர் ஒருங்கிணைப்பு குழுவின் சுவிஸ் கிளை நடாத்திய புத்தாண்டும் புதுநிமிர்வும் வருடாந்த நிகழ்வு ஒன்று நேற்று புதன்கிழமை சூரிச் மாகாணத்தில் இடம்பெற்றுள்ளது. சுவிட்சர்லாந்தில் 24 வது தடவையாக இடம்பெற்ற இந்த நிகழ்வில் பெருந்திரளான சுவிஸ் வாழ் தமிழர்கள் கலந்துகொண்டனர்.
எமது ஈழத்து கலைஞர்கள் பங்குபற்றிய இந்த நிகழ்வில் நடனம் நாட்டியம் மற்றும் தமிழ்ஈழப்பாடல்கள் தென்னிந்தியப்பாடல்கள் என அரங்கம் இசையால் அதிர்ந்தது.
அது மாத்திரமின்றி சிறுவர்களின் நடன நிகழ்வுகளும் இடம்பெற்றதோடு அரங்கமே வயிறு குலுங்க சிரிக்க வைக்கும் அளவிற்கு தாயக கலைஞன் திரு: ரமேஷ் அவர்களின் நெறியாள்கையில் ‘ சோசல் மீடியாவும் சோக்கான ஆட்களும்’ என்ற மேடை நாடகமும் அரங்கேறியிருந்தது.

இன்றைய புதிய தலமுறையினர் சமூகவலைத்தளங்களுக்கும் இணையதளங்களுக்கும் அடிமையாக தமது வரலாற்றையும் தொன்மையினையும் மறந்து கொண்டிருக்கும் நிதர்சனமாக உண்மையினை நகச்சுவையாக உரக்கச்சொல்லியிருந்தார்கள் நாடக குழுவினர். நிகழ்வுக்கான இசையினை சாரங்கி இசைக்குழுவினர் வழங்கியிருந்தார்கள்.
மேடை அறிப்பினை தமக்கான பாணியில் கலகலப்பாகவும் கருத்தாளம் மிக்க கதைகளோடும் நேரத்தியான முறையில் அறிவிப்பாளர் திரு: கவிதரன் மற்றும் தொகுப்பாளினி நிகிதா அவர்களும் வழங்கியிருந்தார்கள்.
மேலும் நிகழ்வுக்கான அணுசரணையாளர்களின் கௌரவிப்பும் கலைஞர்களுக்கான கௌரவிப்பு நிகழ்வுகளும் இடம்பெற்றிருந்தன. இந்நிகழ்வில் தமிழர் ஒருங்கிணைப்பு குழுவின் சுவிஸ் கிளைத்தலைவர் திரு: ரகு அவர்களின் உரையும் இடம்பெற்றதோடு சிறப்பு விருந்தினராக தென்னிந்தியாவின் பிரபல தொலைக்காட்சியான சீ தமிழ் தொலைக்காட்சியின் சரி கம பா நிகழ்வின் டைட்டில் வின்னரான செல்வி:வர்சா கலந்து சிறப்பித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.