தேசத்தின் குரல் அன்டன் பாலசிங்கம் அவர்களின் 18ம்ஆண்டு நினைவு நாளும்.!! 02 .11 .2007 அன்று சிறிலங்கா வான் படையின் குண்டு வீச்சுத் தாக்குதலில் வீரச்சாவடைந்த தமிழீழ விடுதலைப்புலிகளின் மூத்த உறுப்பினர்களின் நினைவேந்தல் நாள் ஒன்று இடம்பெற்றுள்ளது.
குறித்த நிகழ்வில் அரசியல்துறை பொறுப்பாளர் பிரிக்கேடியர் சு.ப.தமிழ்ச்செல்வன் உட்பட லெப்கேணல் அன்புமணி, அலைக்ஸ் மேஜர் செல்வம் , மேஜர் மிகுதன், மேஜர் கலையரசன் , லெப்டினன் ஆட்சிவேல் , லெப்டினன் மாவைக்குமரன் ஆகியோருக்கு 17ம் ஆண்டு நினைவு நாள் சுவிஸ் நாட்டில் வாட் மாநிலத்தில் 14 . 12 2024 சனிக்கிழமை 15 .30 மணிக்கு நடைபெற்றது.
குறித்த நிகழ்வு கவிதரன் தலைமையில் இடம்பெற்றதோடு, வாட் மாநில துணைப்பொறுப்பாளர் கோபு தேசியக்கொடியினை ஏற்றிவைத்தார். தொடர்ந்து மாநில செயற்பட்டாளர் கந்தசாமி பரஞ்சோதி பொதுச்சுடர் ஏற்றிவைக்க, தேசத்தின் குரல் அவர்களின் திருவுருவ படத்துக்கு நீல நட்சத்திர விளையாட்டுக்கழக சார்பாக அண்ணாசாமி யசோதரன் என்கின்ற குரு அவர்கள் சுடர் ஏற்றினார்.

அதனைத்தொடர்ந்து தேசிய செற்பட்டாளர் கணேஷ் அவர்களின் துணைவியார் கோமதி மலர் மாலை அணிவித்தார். மேலும் பிரிக்கேடியர் தமிழ்ச்செல்வன் அவர்களின் திருவுருவப் படத்துக்கு கப்டன் அகிலனின் சகோதரி மல்லிகா மோகன் சுடரேற்ற, லோஜினி சுபகாரன் – விவேகானந்தன் அனுஷ்யா மலர் மாலை அணிவித்தனர்.
தொடர்ந்து லெப்கேணல் அன்புமணி, அலைக்ஸ் மேஜர் செல்வம் , மேஜர் மிகுதன், மேஜர் கலையரசன், லெப்டினன் ஆட்சிவேல், லெப்டினன் மாவைக்குமரன் ஆகியோருக்கு சுடர் ஏற்றி மாலை அணிவிக்கப்பட்டது.
குறித்த நிகழ்வில் நினைவுரையினை சுவிஸ் தமிழர் ஒருங்கணைப்பு பொறுப்பாளர் ரகுராம் (ரகு) ஆற்றியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Place :- Salle des Quals Chem du Lac 43 , 1422 Grandson VD