நீண்ட தூர பயணங்களை வரையறுக்கும் சுவிஸ் விமான சேவை.!! எதிர்வரும் 2025ம் ஆண்டு மே மற்றும் ஜூன் மாதங்களில் நீண்ட தூர பயணங்களை வரையறுப்பதற்கு சுவிஸ் விமான சேவை நிறுவனம் திட்டமிட்டுள்ளது. ஐரோப்பா தவிர்ந்து ஏனைய கண்டங்களுக்கான நீண்ட தூர பயணங்கள் இவ்வாறு வரையறுக்கப்பட உள்ளது.
குறிப்பாக சூரிச்சிலிருந்து மேற்கொள்ளப்படும் பயணங்கள் இவ்வாறு வரையறுக்கப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
எதிர்வரும் 2025ம் ஆண்டு மே மற்றும் ஜூன் மாதங்களில் சூரிச்சிற்கும் பொஸ்டனுக்கும் இடையிலான வாராந்த விமானப் பயணங்கள் 14லிருந்து 12 ஆக குறைக்கப்பட உள்ளது.
சூரிச்சிற்கும் – புதுடெல்லிக்கும் இடையிலான வாராந்த விமானப் பயணங்கள் 7லிருந்து ஆறாக குறைக்கப்பட உள்ளது. டுபாய், ஜொஹனர்ஸ்பேர்க், சங்ஹாய் போன்ற நகரங்களுக்கான பயணங்களும் வரையறுக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
என்ன காரணத்தினால் இவ்வாறு விமானப் பயணங்கள் வரையறுக்கப்படுகின்றன என்பது குறித்த தகவல்களை சுவிஸ் விமான சேவை வெளியிடவில்லை.