சுவிஸ் நெடுஞ்சாலையில் இதை செய்தால் என்ன நடக்கும் தெரியுமா.? சுவிட்சர்லாந்தில் வாகன ஓட்டிகளுக்கு பொதுவான பல்வேறு விதிகள் சட்டங்கள் இருக்கின்றது என்பது உங்களுக்கு தெரியும். ஆனால் வாகன ஓட்டிகள் வீதிகளில் செய்யக்கூடாத பல விடயங்களும் எழுதப்படாத விதியாக சுவிட்சர்லாந்தில் பின்பற்றப்படுகின்றமை உங்களுக்கு தெரியுமா.’ முக்கியமா சாலை நெரிசல் வேளைகளில் நீங்கள் என்னவெல்லாம் செய்யக்கூடாது என்பது பலருக்கு தெரிவதில்லை. அது பற்றிய சில விடயங்களை உங்களுக்கு வழங்குகிறது இன்றைய பதிவு.
சாலையில் நுழைய வேண்டாம்
நெடுஞ்சாலை என்பது வாகனங்களுக்காக மட்டுமே, பாதசாரிகளுக்காக அல்ல. போக்குவரத்து ஸ்தம்பித்தாலும், வாகனங்களில் செல்வோர் சாலையில் செல்ல அனுமதிக்கப்படுவதில்லை. இதைச் செய்பவருக்கு 20 பிராங்குகள் அபராதம் விதிக்கப்படும்.
போக்குவரத்து நெரிசல்களில் கூட உங்கள் சீட் பெல்ட்டைக் கட்டுங்கள்
நெடுஞ்சாலையில் – போக்குவரத்து நெரிசல்களில் கூட சீட் பெல்ட் அணிவது கட்டாயமாகும். சட்டப்படி, போக்குவரத்தில் நிற்பது பயணத்தின் ஒரு பகுதியாக கருதப்படுகிறது. அனைத்து பயணிகளும் சீட் பெல்ட் அணிந்துள்ளார்களா என்பதை போலீசார் முறையாக சரிபார்க்க மாட்டார்கள் என்றாலும், பெல்ட் இல்லாமல் பிடிபட்டவர்கள் 60 பிராங்குகள் அபராதம் செலுத்த வேண்டும்.
அவசரப் பாதை கட்டாயம்
போக்குவரத்து ஸ்தம்பித்திருந்தால், போலீஸ், ஆம்புலன்ஸ் அல்லது தீயணைப்புப் படை போன்ற அவசர வாகனங்களுக்கு அவசர பாதையை உருவாக்க வேண்டும். இந்த அவசர பாதை இடது பாதைக்கும் வலதுபுறம் உள்ள பாதைக்கும் இடையில் இருக்க வேண்டும். இந்த விதியை மீறினால் 100 பிராங்குகள் அபராதம் விதிக்கப்படும்.
போக்குவரத்து நெரிசலில் சத்தம் போடக்கூடாது
போக்குவரத்து நெரிசல் உங்கள் பயணத்தில் சலிப்பு தன்மையை ஏற்படுத்தினாலும், கோபத்தில் ஹாரன் (Horn)அடிப்பது அனுமதிக்கப்படாது. அவ்வாறு ஹான் அடிப்பவருக்கு 40 பிராங்குகள் அபராதம் விதிக்கப்படும். காவல்துறை இதை கவனித்தால் தண்டிக்கலாம். மேலும், நீங்கள் போக்குவரத்து நெரிசலில் இருந்தால், மற்ற சாலை பயனர்களை எச்சரிக்க உங்கள் அபாய விளக்குகளை இயக்க வேண்டும்.
எரிபொருள் தொட்டி
நீங்கள் பயணிக்கும் போது உங்களின் எரிபொருள் தொட்டி காலியாவதை நீங்கள் அவதானிக்காமல் உங்கள் வாகனம் இடைநடுவில் நின்றுவிட்டால் அதற்கும் அபராதம் விதிக்கப்படலாம் என்பதை கவனத்தில் கொள்ளுங்கள். உங்களின் கவனக்குறைவை கணக்கில் எடுத்து இவ்வாறான செயற்பாடுகளுக்கு அபராதம் விதிக்கப்படுகிறது. அதற்கு 120 பிராங்குகள் அபராதம் விதிக்கப்படும். மேலும் அதிவேக பாதைகளில் உங்கள் வாகனங்களை கவனிக்காமல் நிறுத்தினாலும் உங்கள் ஓட்டுநர் உரிமத்தை இழப்பது உட்பட மிகவும் கடுமையான விளைவுகளை ஏற்படுத்தலாம்.
கடுமையான விதிகளை நீதிமன்றம் உறுதி செய்கிறது
போக்குவரத்து நெரிசலின் போது தனது வாகனத்தை வேகமான பாதையில் விட்டுச் சென்ற ஓட்டுநர் தனது ஓட்டுநர் உரிமத்தை இழந்து பெடரல் நீதிமன்றத்திற்குச் சென்றார். போக்குவரத்து நெரிசல் நீங்கும் முன் “சரியான நேரத்தில்” தனது காருக்குத் திரும்பியதாக அவர் வாதிட்டார். ஆனால், வேகமான பாதையில் நிறுத்தப்படும் கார், பின்பக்க மோதலை ஏற்படுத்தும் என்பதால், பெரும் ஆபத்தை ஏற்படுத்துவதாக நீதிமன்றம் சுட்டிக்காட்டியுள்ளது.
எனவே நெடுஞ்சாலையில் உள்ள விதிகள், போக்குவரத்து நெரிசல்களில் கூட வாகன ஓட்டுனர்களுக்கு பொருந்தும் என்பதை நீங்கள் ஒருபோதும் மறந்துவிடாதீர்கள், இவ்வாறான விதிகள் அனைத்து சாலை பயனர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த உதவுகிறது. அபராதம் மற்றும் ஆபத்தான சூழ்நிலைகளைத் தவிர்க்க விதிகளைப் பின்பற்றவும். எப்பொழுதும் உங்களிடம் முழு டேங்க் அல்லது பேட்டரி இருப்பதை உறுதி செய்து கொள்ளவும், மீட்பு பாதை உயிர்களை காப்பாற்றும் என்பதை நினைவில் கொள்ளவும்!