சுவிட்சர்லாந்தில் ‘தன்னுரிமையும், தனியரசும்’ நூல் வெளியீடு.!! எதிர்வரும் சனிக்கிழமை டிசம்பம் 7ம் திகதி அன்று பேர்ன் மாகாணத்தில் தனியுரிமையும் தனிஅரசும் என்ற நூல் வெளியீட்டு நிகழ்வு ஒன்று இடம்பெற விருக்கின்றது.
இந்நூல். சுயநிர்ணயத்தின் வரலாற்றினை சொல்லுவதுடன், காலனித்துவத்திற்கு முன், பின், பனிப்போருக்கு முன், பின் அது எவ்வாறு மாற்றியமைக்கப் பட்டிருக்கிறது என்பதையும் விளக்குகிறது.
தேசிய இனங்கள் எவ்வாறு வரையறுக்கப் படுகின்றதுஇ சனத்தொகையில் சிறுபான்மைத் தேசிய இனங்களின் சுயநிர்ணயம் எந்த வழிகளில் மறுக்கப் படுகின்றது, மேற்குலக, மூன்றாம் உலக நாடுகளில் அது கையாளப் படுகின்ற விதங்கள் எவ்வாறு வேறுபடுகின்றது, இலங்கையில் ஈழத் தமிழர்களின் சுயநிர்ணயம் எந்த வழிகளில் நிராகரிக்கப் பட்டுக் கொண்டிருக்கின்றது, அதனை அடைவதற்கான வழி முறைகள் போன்றவற்றையும் விளக்கியிருக்கிறது.
உள்நாட்டு, பன்னாட்டுச் சட்டங்களில் சுயநிர்ணய உரிமைகள் எவ்வாறு உள்வாங்கப் பட்டிருக்கிறது, ஐநா வின் தோல்விகள் உட்பட பல மேலதிக விடயங்களும் தத்துவ, கோட்பாட்டு அடிப்படையில் அலசப் பட்டிருக்கின்றது.
சுயாட்சி, பிராந்திய அதிகாரங்கள், அதிகாரப் பகிர்வு, என அனைத்து விதமான உள்ளக சுயநிர்ணய உரிமைகளும் நிராகரிக்கபட்ட, மறுக்கப்பட்ட தேசிய இனங்கள், வெளியக சுயநிர்ணயத்தின் மூலம் தனியரசு ஒன்றினை அடையலாம் என்பதை உலகின் பல நாடுகளின் விடுதலைகள் எடுத்துக் காட்டியிருக்கின்றன.
நீண்ட காலமாக அகிம்சை, அற, ஆயுத வழிப் போராடங்களினூடாக ஈழத் தமிழர்கள் தங்களின் அரசியல் விடுதலையை அடைய முயன்றும், அவை அனைத்தும் சிங்கள ஏகாதிபத்தியத்தினால் இரும்புக் கரம் கொண்டு அடக்கப்பட்டு வருவதானது, அவர்களின் அரசியல் விடுதலை, வெளியக சுயநிர்ணயத்தினூடாகவே மட்டும் அடையப்படலாம் என்ற ஒரே வழியினைத் தான் கொண்டிருக்கிறது என்பதனை மக்கள் நாம் அனைவரும் உறுதியாக நம்ப வேண்டும்.
இணக்க அரசியல் என்ற போர்வையில், மீண்டும் மீண்டும் ஏமாற்றப் பட்டு, பின்னடைந்து, அழிக்கப் படுவதற்கு துணை போகக் கூடாது என்பதை இந்நூல் ஆணித் தரமாக கருத்தறிவிக்கின்றமையும் குறிப்பிடத்தக்கது
குறித்த நூல் வெளியீட்டு நிகழ்வானது பேர்ன் சைவநெறிக்கூட அரங்கில் 7ம் திகதி சனிக்கிழமை மாலை 3.30 மணிக்கு ஆரம்பமாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.