ஜெனீவாவில் புதிய வாகன வரி பல கார் உரிமையாளர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. சில கார் உரிமையாளர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கும் புதிய ஜெனிவா வாகன வரி குறித்து நீதிபதிகள் இறுதி முடிவை கூறலாம் என எதிரபார்க்கப்படுகிறது.
வாகன ஓட்டுனர்கள் பலர் எதிர்பார்த்ததை விட பல மடங்கு அதிகமான பில்களை செலுத்த வேண்டியிருந்தது. ஆனால் ஜெனீவா நகர கவுன்சிலர் டேனியல் சோர்மன்னி, இந்த ஆண்டு தொடக்கத்தில் மாற்றத்தை முடிவு செய்தபோது வாக்காளர்களுக்கு போதுமான தகவல்கள் இல்லை என்று நீதிமன்றத்தின் அரசியலமைப்புக்கு எதிராக வாதிட திட்டமிட்டுள்ளார்.

எனவே புதிய சட்டம் ரத்து செய்யப்பட வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்துள்ளார். சுற்றுச்சூழலுக்கு உகந்த கார்களை ஊக்குவிக்கும் வகையில் புதிய வரி விதிக்கப்பட்டுள்ளது. இது வாகனத்தின் வகை, உமிழ்வு மற்றும் ஆற்றல் நுகர்வு ஆகியவற்றைப் பொறுத்தது.
ஆனால் பழைய அல்லது பெரிய கார்களின் பல உரிமையாளர்கள் தாங்கள் நியாயமற்ற முறையில் நடத்தப்படுவதாக உணர்வதாகவும் கருத்து தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.