2025 இல் வெளிநாட்டினருக்கு வேலைவாய்ப்பு : சுவிட்சர்லாந்து அறிவிப்பு 2025 ஆம் ஆண்டில் ஐரோப்பிய ஒன்றியம் அல்லாத மற்றும் ஐரோப்பிய சுதந்திர வர்த்தக சங்கம் அல்லாத நாடுகளைச் சேர்ந்த திறமையான தொழிலாளர்களுக்கான வேலை அனுமதிகளை சுவிட்சர்லாந்து தொடர்ந்து பேணும் என ஃபெடரல் கவுன்சில் நேற்று புதன்கிழமை அறிவித்துள்ளது.
பல தொழில்களில் நிலவும் தொழிலாளர் பற்றாக்குறைக்கு பதிலளிக்கும் வகையில் தற்போது நடமுறையில் இருக்கும் தொழிலாளர்களின் எண்ணிக்கையை அப்படியே தொடரப்போவதாகவும் தெரிவித்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
அடுத்த ஆண்டு, இந்த நாடுகளைச் சேர்ந்த தொழிலாளர்களுக்கு 8,500 அனுமதி வரை கிடைக்கும். இதில் 4,500 B அனுமதிகள் மற்றும் 4,000 L அனுமதிகள்ஆகியவை அடங்கும்.

கூடுதலாக, 2021 முதல், இங்கிலாந்து குடிமக்களுக்கு தனி ஒதுக்கீடு ஒதுக்கப்பட்டுள்ளது. 2025 ஆம் ஆண்டில், பிரிட்டிஷ் குடிமக்களுக்கு ஒதுக்கப்பட்ட 2,100 B அனுமதி மற்றும் 1,400 L அனுமதி உடன் இந்த ஒதுக்கீடு மாறாமல் இருக்கும் எனவும் கூறப்பட்டுள்ளது.
எதிர்காலத்தில், சுவிட்சர்லாந்து பிரிட்டிஷ் நாட்டினரை மூன்றாம் நாட்டு குடிமக்களுக்கான பொது பிரிவில் இணைக்க திட்டமிட்டுள்ளது. இப்போதைக்கு, இந்த அமைப்பு குடியேற்றத்தை நிர்வகிக்கும் போது நாட்டின் திறமையான தொழிலாளர்களின் தேவையை சமநிலைப்படுத்த உதவுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.