ஜெனிவாவில் பார்சல் குண்டுவெடிப்பு : சிறுமி படுகாயம்.!! ஜெனிவாவின் கிரேஞ்ச்-கனல் மாவட்டத்தில் திங்கள்கிழமை பார்சல் வெடிகுண்டு ஒன்று வெடித்ததில், 12 வயது சிறுமி படுகாயமடைந்துள்ளதாக ஜெனிவா அரசு வழக்கறிஞர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
நேற்று மதியம், சுவிட்சர்லாந்தின் ஜெனீவாவிலுள்ள, Grange-Canal என்னுமிடத்தில் அமைந்துள்ள வீடு ஒன்றிலிருந்த தபால் பெட்டி ஒன்றிலிருந்த பார்சல் வெடிகுண்டு ஒன்று வெடித்ததில் ஒரு சிறுபிள்ளை காயமடைந்துள்ளது.
இதற்கிடையில், கோடையில், Saint-Jean எனுமிடத்தில் அமைந்துள்ள வீடு ஒன்றில் நிகழ்ந்த குண்டு வெடிப்பு சம்பவத்துக்கும், இந்த பார்சல் வெடிகுண்டு வெடிப்புக்கும் தொடர்பு இருக்கலாம் என பொலிசார் கருதுகிறார்கள்.
அந்த குண்டு வெடிப்பிலும் ஒருவர் காயமடைந்தார். காயமடைந்த அந்த நபரும் அதே வீட்டில் வாழும் வேறொரு நபரும் ஒரு கைக்கடிகார தயாரிப்பு நிறுவனத்தில் வேலை செய்கிறார்கள்.
அவர்கள் வேலை செய்யும் அந்த கைக்கடிகார தயாரிப்பு நிறுவனத்துக்கும் பல வெடிகுண்டு மிரட்டல்கள் விடுக்கப்பட்டுள்ளதால், இந்த சம்பவங்கள் எல்லாம் ஒன்றுடன் ஒன்று தொடர்புடையவை என பொலிசார் கருதுகிறார்கள்.
©Keystone/SDA