முக்கிய செய்திகள்

குடும்ப வன்முறை தொடர்பாக ஆர்காவ் மண்டலத்தில் ஒருவர் கைது

ஆர்காவ்,மண்டலத்தில்,கைது

குடும்ப வன்முறை தொடர்பாக ஆர்காவ் மண்டலத்தில் ஒருவர் கைது – சுவிட்சர்லாந்தின் ஆர்காவ் மண்டலத்தில் குடும்ப வன்முறை தொடர்பாக 46 வயது நபரை பொலிசார் கைது செய்துள்ளனர். குறித்த நபரின் மனைவி தீவிர சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

ஆர்காவ் மண்டலத்தின் Schafisheim பகுதியிலேயே குறித்த சம்பவம் நடந்துள்ளது. சம்பவத்தின் போது உதவி கேட்டு பொலிசாருக்கு தொலைபேசி அழைப்பு வந்துள்ளது.

தகவல் அறிந்து சம்பவப்பகுதிக்கு விரைந்த பொலிசார் 44 வயதான பெண்மணி மூச்சு பேச்சின்றி கிடப்பதை கண்டுள்ளனர். தொடர்ந்து மருத்துவ உதவிக்குழுவினரின் முயற்சியில் அவர் மீட்கப்பட்டு, உடனடியாக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.

இதனையடுத்து கொலை முயற்சியில் ஈடுபட்டதாக கூறி 46 வயதான கணவரை பொலிசார் கைது செய்துள்ளனர். கணவரின் தாக்குதலுக்கு இலக்கான அந்த கொசோவோ நாட்டவர், அருமையாண பெண்மணி என அக்கம்பக்கத்தினர் தெரிவித்துள்ளனர்.

ஆர்காவ்,மண்டலத்தில்,கைது, ஆர்காவ் மண்டலத்தில் ஒருவர் கைது

மட்டுமின்றி, தனிப்பட்ட விவகாரங்கள் எதையும் அவர் பகிர்ந்து கொண்டது இல்லை எனவும், தமது கணவரை மிகவும் நம்பியிருந்த பெண்மணி அவர் எனவும் தெரிவித்துள்ளனர்.

Related posts