ஜெனீவாவில் நூற்றுக்கும் மேற்பட்ட மோட்டார் சைக்கிள் அணிவகுப்பு.!! சுவிட்சர்லாந்தின் ஜெனீவா நகரத்தில், நூற்றுக்கும் மேற்பட்ட மோட்டார் சைக்கிள்களில் மக்கள் அணிவகுத்துச் சென்றார்கள்.
கடந்த வாரம், என்ஸோ (Enzo, 19) என்னும் இளைஞர், மோட்டார் சைக்கிளில் சென்றுகொண்டிருக்கும்போது, பாரிய விபத்தொன்றில் சிக்கி பலியானார்.
என்ஸோவுடன் பயணித்த அவரது காதலி, விபத்தில் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அனைவருடனும் எப்போதும் இனிமையாக பழகும் என்ஸோவின் நினைவாகவே, சனிக்கிழமையன்று, ஜெனீவா நகரத்தில், நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் மோட்டார் சைக்கிள்களில் அணிவகுத்துச் சென்றார்கள்.