சுவிஸ் ஈழத்து தமிழ் பெண்ணின் சாதனை : விருதுபெற்ற ஆய்வு..!! சுவிட்சர்லாந்தின் ஒப்வால்டனைச் சேர்ந்த 24 வயதான தமிழ் புலம்பெயர்ந்தோரின் மகளான சிவஸ்வினி மதியாபரணம் லூசெர்ன் பல்கலைக்கழகத்தின் கலாச்சார மற்றும் சமூக அறிவியல் பீடத்தில் தனது சிறந்த இளங்கலை ஆய்வறிக்கைக்காக அங்கீகரிக்கப்பட்டுள்ளார்.
அங்கு இது கலாச்சார மற்றும் சமூக அறிவியல் பீடத்தில் சிறந்த ஆய்வறிக்கையாக கௌரவிக்கப்பட்டது. அவரது ஆராய்ச்சி சுவிட்சர்லாந்தில் உள்ள இரண்டாம் தலைமுறை தமிழர்கள் தங்கள் தமிழ் பாரம்பரியத்தை சுவிஸ் கலாச்சார தாக்கங்களுடன் எவ்வாறு சமநிலைப்படுத்துகிறார்கள் என்பதை அவரது ஆய்வு ஆராய்கிறது.
சர்னனில் பிறந்து வளர்ந்த இவரது குடும்பம் இலங்கையிலிருந்து சுவிட்சர்லாந்திற்கு அகதிகளாக வருகை தந்துள்ளனர். அவரது தந்தை ஒரு சமையல்காரராகவும், அவரது தாயார் உதவி சமையல்காரராகவும் பணிபுரிந்தார். சிவஸ்வினி சிறுவயதிலிருந்தே தமிழ்ப் பள்ளியில் பயின்றார். மற்றும் பெரும்பாலும் சுவிஸ் சூழலில் வளர்ந்த போதிலும், நடனம், இசை மற்றும் கலாச்சார நிகழ்வுகள் மூலம் தமிழ் சமூகத்துடன் தீவிரமாக ஈடுபட்டார்.

அவரது ஆராய்ச்சிப் பயணம் என்பது உயர்நிலைப் பள்ளியில் ஆரம்பமாகியது. அங்கு அவர் தமிழ்-இந்து குடும்பங்களில் நிச்சயிக்கப்பட்ட திருமணங்களைப் பயும் எழுதியுள்ளார். இது அவரது பல்கலைக்கழக படிப்பின் போது மேலும் கல்வி ஆய்வுக்கு வழிவகுத்தது. அவரது இளங்கலை ஆய்வறிக்கைக்காக, அவர் இரண்டாம் தலைமுறை தமிழ் சுவிஸ் இளைஞர்களின் 20 இன்ஸ்டாகிராம் சுயவிவரங்களை பகுப்பாய்வு செய்தார்.
அவர்கள் ஆன்லைனில் தங்களை எவ்வாறு சித்தரிக்கிறார்கள் என்பதை ஆராய நேர்காணல்களை நடத்தினார். இந்த கலப்பினமானது ஒரு தனித்துவமான கலாச்சாரத்தை பிரதிபலிக்கிறது. இது சிவஸ்வினியால் “மூன்றாவது கலாச்சாரம்” என்று அடையாளப்படுத்தப்படுகிறது. அவரது கண்டுபிடிப்புகள், பலர் தமிழ் மற்றும் சுவிஸ் கலாச்சார கூறுகளை கலப்பதன் மூலம் “கலப்பின” அடையாளத்தை உருவாக்குகிறார்கள் என்பதை வெளிப்படுத்தியது.
இது தொடர்பான அவரது ஆய்வறிக்கையின் முடிவில், மார்ச் 2024 இல் அவரது ஆசிரியர்களால் சிறந்த இளங்கலை ஆய்வறிக்கையாக அங்கீகரிக்கப்பட்டது. தற்போது, சிவஸ்வினி மதியாபரணம் செயின்ட் கேலன் பல்கலைக்கழகத்தில் மேலாண்மை, மற்றும் கலாச்சாரத்தில் முதுகலைப் படிப்பில் சேர்வதன் மூலம் தனது கல்விப் பணியைத் தொடர திட்டமிட்டுள்ளார்.
வின்டர்தூரில் உள்ள பணியாளர் மற்றும் வேலை வாய்ப்பு நிறுவனத்தில் ஆட்சேர்ப்பு உதவியாளராகபகுதி நேர வேலையுடன் தனது படிப்பை சமநிலைப்படுத்துகிறார். கலாச்சார மற்றும் தொழில் பாதுகாப்பு இரண்டையும் பராமரிப்பதன் முக்கியத்துவத்தால் தனது கல்வி மற்றும் தொழில்முறை பயணத்தில் அவர் உறுதியாக செயல்பட்டுவருகிறார்.
சொந்த நாட்டை விட்டு அகதிகளாக சுவிட்சர்லாந்துக்கு வருகை தந்து பல்வேறு இன்னல்களையும் சரியான முறையான கல்வியைப் பெறாத பெற்றோரால் வளர்க்கப்பட்ட சிவஸ்வினியின் திறமையை சுவிட்சர்லாந்து வாழ் தமிழர்கள் பராட்டிவருகின்றனர்.
அவரது படிப்பு மற்றும் சமூகத்தின் மீதான அவளது அர்ப்பணிப்புஇ சுவிட்சர்லாந்தில் உள்ள தமிழ் சமூகத்தில் உள்ள அவரது சகாக்கள் மற்றும் இளைய தலைமுறையினரை மேலும் ஊக்கப்படுத்துவதாகவே அமைந்துள்ளது.
இது தொடர்பாக யேர்மன் மொழியில் ஒரு கட்டுரை சுவிட்சர்லாந்தின் பத்திரிகை மற்றும் obwaldnerzeitung.ch இணையதளத்தில் வெளியாகியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
தனது இந்த முயற்சி பற்றி சிவஸ்வினி மதியாபரணம் ஊடகத்திற்கு தெரிவிக்கையில்,
“எனது இந்த வெற்றி தன்னை இவ்வளவு தூரம் வளர்த்து, சிறந்த முறையில் கல்வி நடவடிக்கைகளை மேற்கொள்ள உதவிய தன்னுடைய பெற்றோரையும், தனக்கு கல்வி கற்றுத்தந்த ஆசிரியர்களையுமே சாரும் எனத்தெரிவித்திருந்தார்.
மேலும் நண்பர்கள் நண்பிகளது ஊக்கப்படுத்தல் மூலமே புதிய விடயங்களை சாதிக்க வேண்டும் என்ற எண்ணம் உருவானதாகவும் குறிப்பிட்ட சிவஸ்வினி மதியாபரணம் அவர்கள் இந்த தருணத்தில் அனைத்து நண்பர்களுக்கும் நன்றி கூற கடமைப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
சுவிஸ்தமிழ் மீடியாவின் சார்பிலும் எங்களது மனமார்ந்த வாழ்த்துக்கள்….