சுவிட்சர்லாந்தின் வாட் மாகாணத்தில் வெடிப்பு சம்பவம் : ஒருவர் பலி
சுவிட்சர்லாந்தின் வாட் மாகாணத்தில் வெடிப்பு சம்பவம் : ஒருவர் பலி
சுவிட்சர்லாந்தின் வாட் மாகாணத்தில் வெடிப்பு சம்பவம் : ஒருவர் பலி சுவிஸ் மாகாணமொன்றில் அமைந்துள்ள குடியிருப்பு ஒன்றில் ஏற்பட்ட வெடிவிபத்தில் ஒருவர் பலியானார், இருவர் காயமடைந்துள்ளனர்.
சுவிட்சர்லாந்தின் வாட் மாகாணத்தில் அமைந்துள்ள அடுக்குமாடிக் குடியிருப்பு ஒன்றில் நேற்று காலை வெடிவிபத்தொன்று ஏற்பட்டுள்ளது.
அவசர உதவிக்குழுவினர் சம்பவ இடத்துக்குச் சென்றபோது, பயங்கரமாக பற்றியெரியும் தீயையும் கரும்புகையையும் அவர்கள் எதிர்கொள்ள நேர்ந்தது.
உடனடியாக அந்த குடியிருப்பில் இருந்தவர்கள் வெளியேற்றப்பட்ட நிலையில், சிலர் புகையை சுவாசித்ததால் ஏற்பட்ட பாதிப்புக்காக சிகிச்சை பெறும் நிலை ஏற்பட்டது.
கட்டிடத்துக்குள் நுழைந்த அவரச உதவிக்குழுவினர், ஒருவர் உயிரிழந்து கிடந்ததைக் கண்டுள்ளனர். அவர் யார் என்பது தெரியவில்லை. இருவர் காயமடைந்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பாக அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.