Swiss Local NewsSolothurn

துப்பாக்கிமுனையில் கட்டிவைத்து கொள்ளை : சொலுத்தூர்னில் பரபரப்பு.!!

கன்டோன் சொலுத்தூனில் பரபரப்பு : துப்பாக்கிமுனையில் கட்டிவைத்து கொள்ளை

துப்பாக்கிமுனையில் கட்டிவைத்து கொள்ளை : சொலுத்தூர்னில் பரபரப்பு.!! திங்கட்கிழமை, செப்டம்பர் 30 ஆம் தேதி, காலை 9 மணிக்கு முன்னதாக, கன்டோன் சொலுத்தூர்னில் பரபரப்பு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

சொலுத்தூர்ன் – ஓன்சிங்கனில் உள்ள டுனெர்ன்ஸ்திரஸ்ஸவில் அமைந்துள்ள கேரேஜில் இரண்டு பேர் தாக்கப்பட்டு கொள்ளையடிக்கப்பட்டதாக கன்டோனல் எச்சரிக்கை மையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

ஆரம்பகட்ட கண்டுபிடிப்புகளின்படி, அடையாளம் தெரியாத இருவரால் ஆயுதம் காட்டி மிரட்டி, கட்டி வைத்து கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. எனினும் இச்சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என சொலுத்தூர்ன் கன்டோனல் போலீசார் தெரிவித்தனர்.

துப்பாக்கிமுனையில்
(c) Zuritoday

Grosser Einsatz in Oensingen wegen Raububerfall – Polizei bestatigt Schussabgabe ZuriToday 09 30 2024 07 53 PM

தாக்குதலின் போது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாகவும் கூறப்படுகிறது. இதனால் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என தற்போது போலீசார் தெரிவிக்கின்றனர்.

லைசென்ஸ் பிளேட் இல்லாத சில்வர் நிற கோல்ஃப் கார் ஒன்றில் தெரியாத திசையில் திருடப்பட்ட பொருட்களுடன் குற்றவாளிகள் தப்பி ஓடியுள்ளனர். சொலுத்தூர்ன் கன்டோனல் காவல்துறையின் பல ரோந்துப் படையினர் இணைந்து உடனடியாகத் தேடுதல் வேட்டையில் இறங்கியுள்ளனர். கன்டோனின் எல்லைப்பகுதிகள் அனைத்தும் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது.

குற்றம் சாட்டப்பட்ட இரண்டு குற்றவாளிகளும் 30 முதல் 35 வயதுக்கு இடைப்பட்டவர்கள் எனவும் 170 முதல் 180 செமீ உயரம் கொண்ட வெளிநாட்டைச் சேர்ந்தவர்கள் என மதிப்பிடப்பட்டுள்ளது.

(c) Zuritoday

Related Articles

Back to top button