Swiss Local NewsZurich

சுவிஸில் தமிழ் இனைஞனின் மரணம் : வெளியான புதிய தகவல்கள்

சுவிஸில் தமிழ் இனைஞனின் மரணம் : வெளியான புதிய தகவல்கள்

சுவிஸில் தமிழ் இனைஞனின் மரணம் : வெளியான புதிய தகவல்கள்..!! நேற்று புதன்கிழமை அதிகாலை, கிளாட்ப்ரூக்கில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் இலங்கையை சேர்ந்த தமிழன் இளைஞன் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ள செய்தி பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

நேற்று சுவிட்சர்லாந்து ஊடகங்களில் வெளியான இந்த செய்திகளின் அடிப்படையி;ல் மரணமானவர் யார் என்பது பற்றிய தகவல்கள் வெளியாகியிருக்கவில்லை. எனினும் இன்று அது பற்றிய மேலதிக விபரங்கள் வெளியாகியுள்ளது.

நேற்று முதல் சமூகவலைத்தளங்களில் இது ஒரு கொலை என வதந்திகள் பரவிவருகின்றது. எனினும் சுவிட்சர்லாந்து போலீசாரால் இதுவரை உத்தியோக கொலைசெய்யப்பட்டார் என அறிவிக்கப்படவில்லை என்பது சுட்டிக்காட்டத்துக்கது.

சுவிஸில் தமிழ் இனைஞனின் மரணம்

குறித்த இளைஞன் திருகோணமலையை பிறப்பிடமாக கொண்டவர் என்பதும் 34 வயதுடைய நடராஜா கோபிநாத் என்பதும் தெரியவந்துள்ளது. இவர் திருமணமாகி ஒரு குழந்தையும் உள்ளது எனவும் ஆனால் தற்போது மனைவியிடம் இருந்து விவாகரத்து கோரிய நிலையில் உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

தமிழ் இன உணர்வாளராக சமூகவலைத்தளங்களில் எப்பொழுதும் தமது பதிவுகளையும் கருத்துக்களையும் தெரிவித்து வந்தவர் என அவரது சமூகவலைத்தளங்கள் சான்றுபகிர்கின்றன.

கோபியின் இறப்பு

எனினும் மரணம் தொடர்பான சரியான தகவல்கள் இதுவரை வெளியிடப்படவில்லை. சம்பவத்தின் போது கைது செய்யப்பட்ட சுவிட்சர்லாந்து நாட்டைச்சேர்ந்த 40 மற்றும் 54 வயதுடைய ஆண்கள் இருவரும் ஒன்றாக அவருடன் அப்பார்ட்மென்டில் தங்கியிருந்தவர்கள் என தெரிவிக்கிறார்கள்.

READ ALSO :- சூரிச் அப்பார்ட்மென்டில் இலங்கையை சேர்ந்தவர் கொலை.? : இருவர் கைது.!

குறித்த இளைஞன் ஏற்கனவே ஒரு சில மாதங்களுக்கு முன்னர் மாரடைப்பு ஏற்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்ததாகவும் இந்த மரணம் இயற்கை மரணமாக இருக்க அதிக வாய்பு உள்ளதெனவும் நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

எனினும் சுவிஸ் வாழ் தமிழ் சமூகத்துடன் நெருங்கிய நட்பையும் தொடர்பையும் பேணிவந்த கோபிநாத்தின் இழப்பு தொடர்பாக பலரும் கவலை வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Articles

Back to top button