Swiss Local NewsAargau

ஆர்காவில் கார் கவிழ்ந்து விபத்து : 65 வயது முதியவர் பலி.!!

ஆர்காவில் கார் கவிழ்ந்து விபத்து : 65 வயது முதியவர் பலி.!!

ஆர்காவில் கார் கவிழ்ந்து விபத்து : 65 வயது முதியவர் பலி.!! சனிக்கிழமை மாலை ஆர்காவ் இன் கொல்லிகன் பகுதியில் 65 வயதான ஓட்டுநர் தனது காரை சாலையில் இருந்து ஓட்டிச் சென்று கற்கள், மரங்கள் மற்றும் வேலி மீது மோதியுள்ளார். அப்போது கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் பலத்த காயமடைந்த ஓட்டுநர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

ஆர்காவில்
©கீஸ்டோன்/எஸ்டிஏ

ஞாயிற்றுக்கிழமை ஆர்காவ் கன்டோனல் பொலிஸால் அறிவிக்கப்பட்டபடிஇ அந்த நபர் கொல்லிகனின் நுழைவாயிலில் இடதுபுற வளைவில் நேராக முன்னோக்கிச் சென்றுகொண்டிருக்கும்போதே விபத்து நேர்ந்துள்ளதாக தெரிவித்தனர்.

உடனடியாக அப்பகுதி மக்கள் அவசர சேவைக்கு தகவல் அளித்து முதலுதவி அளித்தனர். ஒரு ஆம்புலன்ஸ் சம்பவ இடத்திற்கு விரைவாகச் சென்றது. ஆனால் ஓட்டுநர் சம்பவ இடத்திலேயே இறந்தார் என்று பொலிஸ் அறிக்கைகள் தெரிவிக்கின்றன.

©கீஸ்டோன்/எஸ்டிஏ

Related Articles

Back to top button