Swiss Tamil eventsSwiss headline News

சுவிட்சர்லாந்தில் ஒன்று திரண்ட புலிகளின் போராளிகள் கட்டமைப்பு

சுவிட்சர்லாந்தில் ஒன்று திரண்ட புலிகளின் போராளிகள் கட்டமைப்பு

சுவிட்சர்லாந்தில் ஒன்று திரண்ட புலிகளின் போராளிகள் கட்டமைப்பு சுவிட்சர்லாந்தின் ஆர்காவ் மாநிலத்தில் தமிழீழ விடுதலைப்புலிகளின் போராளிகள் கட்டமைப்பினரால் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. குறித்த கலந்துரையாடல் கடந்த (01.09.2024) ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றுள்ளது.

தேசியப் பணியை சுமக்கும் முன்னாள் போராளிகளுக்கும்இ மக்களுக்குமான கலந்துரையாடலாகவே அது அமைந்திருந்ததுடன் பெருமளவாக வருகை தந்திருந்த மக்களுள் இளையோர்களையே அதிகமாக காணக்கூடியதாய் இருந்தது.

குறித்த கலந்துரையாடலுக்கு சென்றிருந்த ஒருவர் இது பற்றி கருத்து தெரிவிக்கையில், பலதரப்பட்ட மக்களது வினாக்களுக்கு முன்னாள் போராளிகள் மிகத் துணிவுடனும் தெளிவுடனும் பதில்களை வழங்கியிருந்தனர். அவர்களது அந்த தெளிவான பதில்களில் அவர்களது ஆளுமையும் தலைவரது வளர்ப்பும் தெரிந்ததாக குறிப்பிட்டார்.

குறித்த கலந்துரையாடலி;ல் மூன்று பிரதான கோரிக்கைகள் மக்களால் வைக்கப்பட்டு விவாதங்களுக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

போராளிகள் கட்டமைப்பு

ஒன்று …..
தற்போது மக்களை ஏமாற்றும் விதமாக திரிவுபடுத்தப்பட்ட போலி கதைகளைக் கூறி பண மோசடியில் ஈடுபடுவோர்க்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பதும்இ போலி பண வசூலிப்பிற்கு எதிராக மக்கள் மத்தியில் விழிப்புணர்வை கொண்டுவருவதும்.

இரண்டாவது ….
இனத்தின் வரலாற்றை இழிவு படுத்த நினைக்கும் துரோக கும்பல்களுக்கு எதிராக மக்களை அணிதிட்டுவது.

மூன்றாவது ……
சுவிஸ் நாட்டில் இருக்கின்ற கட்டமைப்பை சிதைக்க நினைக்கின்ற உலக வல்லாதிக்க சக்திகளோடு சேர்ந்தியங்கும் துரோகக் கும்பல்களிடமிருந்து சுவிஸ் தேசியக் கட்டமைப்பை காப்பாற்றி தேசிய தலைவரின் சிந்தனைக்கு ஏற்ப செயலாற்ற வைப்பது. போன்ற கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டது.

சுவிஸ் தமிழர் ஒருங்கிணைப்பு குழுவிற்குள் மூடி மறைக்கப்பட்டிருக்கும் நிதி மோசடிகள்இ ஊளல்கள்இ துரோகங்கள் என்பனவற்றை எவ்வாறு வெளியில் கொண்டு வருவது? என்பதே பெரும்பான்மையான மக்களின் கோரிக்கையாக இருந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.

அண்மைக்காலமாகவே சுவிட்சர்லாந்தில் பல்வேறு குழப்பகரமான சம்பவங்கள் இடம்பெற்று வருகின்றமையும் அதனைத்தொடர்ந்து தேசியத்தின்பால் பற்றுக்கொண்ட பலரும் குழம்பிப்போய் இருக்கின்ற இந்த சூழ்நிலையில் இவ்வாறானதொரு சந்திப்பும் கலந்துரையாடலும் இடம்பெற்றிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

மூலம் :- சந்திரலோகன் சிவஞானம்(Lausanne)

Related Articles

Back to top button