Swiss headline NewsSwiss informations
சுவிட்சர்லாந்தில் 2025 இல் மின்சாரக்கட்டணங்கள் குறைக்கப்படும்
சுவிட்சர்லாந்தில் 2025 இல் மின்சாரக்கட்டணங்கள் குறைக்கப்படும்
சுவிட்சர்லாந்தில் இந்த ஆண்டு மின்சாரக்கட்டங்கள் அதிகரிப்பை சந்தித்திருந்தன. எனினும் தற்போது 2025 ஆம் ஆண்டில் சுவிட்சர்லாந்தில் மின்சார விலை சராசரியாக 10% குறையும் என்று சுவிஸ் ஃபெடரல் எலெக்ட்ரிசிட்டி கமிஷன் (ElCom) இன்று அறிவித்துள்ளது.
இந்த விலைக்குறைப்பு மாகாணங்களுக்கு மாகாணம் வேறுபடலாம். இருப்பினும், ஒரு நிலையான குடும்பம் ஒரு கிலோவாட்- மணி நேரத்திற்கு 29 சென்ட்கள் அறவிடப்படும். இது 2024 ஐ விட 3.14 சென்ட்கள் குறைவு என்பது குறிப்பிடத்தக்கது.
சுவிஸ் ஃபெடரல் எலெக்ட்ரிசிட்டி கமிஷன் இன் கணக்கீடுகளின்படி, ஆண்டுதோறும் 4,500 kWh ஐ பயன்படுத்தும் ஒரு குடும்பம் 1,305 சுவிஸ் பிராங்குகள் செலுத்த வேண்டும் . இது எதிர்வரும் ஆண்டு சுமார் 141 சுவிஸ் பிராங்குகள் குறைவு என்பது குறிப்பிடத்தக்கது.