சுவிஸில் அதிகரித்துள்ள குடியிருப்பு மற்றும் வீட்டு வாடகை
சுவிஸில் அதிகரித்துள்ள குடியிருப்பு மற்றும் வீட்டு வாடகை
சுவிஸில் அதிகரித்துள்ள குடியிருப்பு மற்றும் வீட்டு வாடகை சுவிட்சர்லாந்தில் ஒற்றைக் குடும்ப வீடுகள் மற்றும் அடுக்குமாடி குடியிருப்புகளுக்கான விலைகள் ஆகஸ்ட் மாதத்தில் சிறிதளவு உயர்வை சந்தித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. ஆனால் ஆண்டுக்கு ஆண்டு இவ்வாறு விலைகளில் ஏற்றத்தாழ்வு இடம்பெறுகிறது:
Immoscout24 மற்றும் ரியல் எஸ்டேட் ஆலோசனை நிறுவனமான IAZI வெளியிட்ட “Swiss Real Estate Offer Index” “சுவிஸ் ரியல் எஸ்டேட் ஆஃபர் இன்டெக்ஸ்” தகவல் ஒன்றிலையே குறித்த விடயங்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன.
ஜூலை மாதத்துடன் ஒப்பிடுகையில் ஒற்றைக் குடும்ப வீடுகள் மற்றும் அடுக்குமாடி குடியிருப்புகளுக்கான விலைகள் 0.5% அதிகரித்துள்ளது. இந்த உயர்வு இருந்தபோதிலும், கடந்த மாதங்களில் விலைகள் ஏற்ற இறக்கம் காணப்பட்டது. மற்றும் கடந்த ஆண்டு இதே மாதத்தை விட 0.1% மட்டுமே அதிகமாக உள்ளது.
வாடகைதாரர்களை பொறுத்தமட்டில், ஆகஸ்ட் மாதத்தில் அதிக வாடகை விலைகளை எதிர்கொண்டனர். விளம்பரப்படுத்தப்பட்ட வாடகை ஜூலை மாதத்துடன் ஒப்பிடுகையில் 2.1% அதிகரித்துள்ளது.
இது முந்தைய விலை சரிவை மாற்றியமைத்துள்ளதோடு, அதிகரிப்புகள் சூரிச் பகுதி, மத்திய சுவிட்சர்லாந்து மற்றும் டிசினோவில் காணப்பட்டுள்ளன. அதே நேரத்தில் மத்திய பீடபூமி மற்றும் ஜெனீவா ஏரி போன்ற பகுதிகள் சிறிய உயர்வுகளைக் கண்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
சுவிட்சர்லாந்தில் வாடகை விலைகள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன, ஆகஸ்ட் 2023 உடன் ஒப்பிடும்போது 3.4% அதிகரிப்பைக் காட்டுகிறது, இது சுவிஸ் வாடகை சந்தையில் நீண்ட கால போக்கை உணர்த்துவதாக அமைந்துள்ளது.
©கீஸ்டோன்/SDA