சுவிஸ் முன்னாள் அரசியல்வாதி ஒருவருக்கு 9 மாத சிறை .!!
சுவிஸ் முன்னாள் அரசியல்வாதி ஒருவருக்கு 9 மாத சிறை .!!
சுவிஸ் முன்னாள் அரசியல்வாதி ஒருவருக்கு 9 மாத சிறை .!! சூரிச் கன்டோனல் நீதிமன்றம் முன்னாள் SVP கன்டோனல் கவுன்சிலரான Bernhard Diethelm – பெர்ன்ஹார்ட் டீதெல்முக்கு 9 மாதம் சிறைத்தண்டனை அளித்துள்ளது.
2021 ஆம் ஆண்டு விபச்சாரியுடன் தொடர்புடைய தாக்குதல் ஒன்றிற்காகவே இவ்வாறு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
நீதிமன்றம் ஏற்கனவே அவருக்கு விதித்திருந்த தண்டனையுடன் மேலும் ஒரு மாதத்தை சேர்த்துள்ளது. ஆனால் கற்பழிப்பு முயற்சி மற்றும் உயிருக்கு ஆபத்து போன்ற கடுமையான குற்றச்சாட்டுகளில் இருந்து அவரை விடுவித்துள்ளது.
26 வயதுடைய விபாரத்தில் ஈடுபடும் பெண் ஒருவருடன் ஏற்பட்ட சந்திப்பின் போது இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. அவள் காவல்துறையை அழைப்பாள் என்பதை உணர்ந்த பிறகுஇ பெர்ன்ஹார்ட் வெறுங்காலுடன் தப்பி ஓடினார் எனவும் செய்திகள் தெரிவிக்கின்றன.
தெளிவான காயங்களை மேற்கோள் காட்டிஇ பெண் மீதான தாக்குதலை நீதிமன்றம் உறுதிப்படுத்தியது. ஆனால் உயிருக்கு ஆபத்தான செயல்களுக்கு எந்த ஆதாரமும் இல்லை.
பெர்ன்ஹார்ட் டீடெல்ம் பாதிக்கப்பட்டவரின் கழுத்தை நெரிக்க முயன்றதாக வாதிட்டு 18 மாத சிறைத்தண்டனையை அரசு தரப்பு கோரியிருந்தமை யும் குறிப்பிடத்தக்கது.