சூரிச்சில் ரயிலில் மோதுண்டு தண்டவாளத் தொழிலாளி பலி.!!
சூரிச்சில் ரயிலில் மோதுண்டு தண்டவாளத் தொழிலாளி பலி.!!
சூரிச்சில் ரயிலில் மோதி தண்டவாளத் தொழிலாளி பலி.!! இன்று செவ்வாய்க் கிழமை (செப்டம்பர் 3, 2024) காலை (Schlieren) ஷ்லீரனில் நடந்த ரயில் விபத்தில் தண்டவாளத் தொழிலாளி ஒருவர் படுகாயமடைந்தார்.
செவ்வாய்க் கிழமை காலை எட்டு மணிக்குப் பிறகு, ஷ்லீரனுக்கும் (Schlieren) சூரிச் ஆல்ட்ஸ்டெட்டனுக்கும் (Altstetten) இடையே தண்டவாளத்தில் பாதை வேலைகள் நடந்தன.
அவ்வழியாகச் சென்ற ரயில் ஒன்று தண்டவாளத் தொழிலாளி மீது மோதியது. 28 வயதுடைய நபரே இவ்வாறு மோதுண்டு பலத்த காயங்களுக்கு உள்ளாகினார். சம்பவ இடத்திலையே அவருக்கு முதலுதவி அளிக்கப்பட்டு அவசர சேவைகள் அழைக்கப்பட்டன.
அவசர சேவைகள் விரைந்து வந்தும் பலன் அளிக்கவில்லை. குறித்து நபர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்திருந்தனர்.
விபத்துக்கான காரணம் இன்னும் தெளிவாகத் தெரியவில்லை, மேலும் சூரிச் அரசுவழக்கறிஞர் அலுவலகத்தின் நெருக்கமான ஒத்துழைப்புடன் ஜூரிச் கன்டோனல் காவல்துறையால் விசாரிக்கப்பட்டு வருகிறது.
(c) Kantonspolizei Zürich