கிறிஸ்தவர்கள் துன்புறுத்தப்படுவதை எதிர்த்து பேர்ன்னில் ஆர்ப்பாட்டம்
கிறிஸ்தவர்கள் துன்புறுத்தப்படுவதை எதிர்த்து பேர்ன்னில் ஆர்ப்பாட்டம்
கிறிஸ்தவர்கள் துன்புறுத்தப்படுவதை எதிர்த்து பேர்ன்னில் ஆர்ப்பாட்டம் உலகெங்கிலும் உள்ள கிறிஸ்தவர்கள் துன்புறுத்தப்படுவதைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த சனிக்கிழமையன்று பல நூறு பேர் பெர்னில் உள்ள Bundesplatz இல் ஆர்ப்பாட்டம் ஒன்றை நடாத்தியுள்ளனர்.
மத சுதந்திரத்தின் முக்கியத்துவத்தை எடுத்துரைக்கும் வகையில் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த நிகழ்வில் ஈடுபட்டுள்ள பல கிறிஸ்தவ அமைப்புகளின் கூற்றுப்படி, கிறிஸ்தவர்கள் 78 நாடுகளில் துன்புறுத்தலை எதிர்கொள்கின்றனர்என தெரிவித்திருந்தனர். இது “நினைக்க முடியாத மனித உரிமை மீறல்” என்று அவர்கள் விவரித்தனர்.
பேரணியின் ஏற்பாட்டாளர்கள், “துன்புறுக்கப்பட்டவர்களுக்காக குரல் கொடுப்பதே” தங்கள் இலக்கு என்று வலியுறுத்தினார்கள். துன்பப்படுபவர்களுக்கு ஊக்கம் அளிக்கவும், அவர்கள் மறக்கப்பட மாட்டார்கள் என்பதை உறுதிப்படுத்தவும் அவர்கள் விரும்புவதாக ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டவர்கள் மேலும் தெரிவித்தனர்.
(c) bluewin.ch