டாவோசுக்கு விடுமுறைக்கு வந்த யூதர் மீது தாக்குதல் : இருவர் கைது
டாவோசுக்கு விடுமுறைக்கு வந்த யூதர் மீது தாக்குதல் : இருவர் கைது
டாவோசுக்கு விடுமுறைக்கு வந்த யூதர் மீது தாக்குதல் : இருவர் கைது டாவோஸில் விடுமுறையை கழிக்கவந்த யூதர் ஒருவர் உடல்ரீதியாக தாக்கப்பட்டுள்ளார். கடந்த வாரம் குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக கிராவுண்டன் போலீசார் தெரிவித்துள்ளனர். தாக்கப்பட்டவர் 19 வயதுடையவர் எனவும் தெரியவந்துள்ளது.
இது தொடர்பாக நிராகரிக்கப்பட்ட புகலிடக் கோரிக்கையாளர்கள் என அடையாளம் காணப்பட்ட இரண்டு சந்தேக நபர்களை பொலிஸார் தற்போது கைது செய்துள்ளனர்.
24 வயது மற்றும் 29 வயதுடைய ஆண்கள், Davos Platz இல் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அவர்கள் ஒரே இரவில் தாக்குதல் மற்றும் இரண்டு திருட்டுச் சம்பவங்களைச் செய்திருக்கலாம் என்று பலமாக சந்தேகிக்கப்படுகிறது.
கிராபண்டன் கன்டோனல் காவல்துறை மற்றும் அரசு வழக்கறிஞர் அலுவலகம் மற்ற குற்றங்களுக்கு சந்தேக நபர்களும் பொறுப்பாக இருக்க முடியுமா என்று சோதித்து வருகின்றனர். இது தொடர்பான மேலதிக விசாரணை நடந்து வருகிறது.